Wednesday, November 17, 2010

சாதீய சாயம் - ஓட்டரசியல்..

                                                    
எல்லோராலும் மதிக்கப்படவேண்டிய தேசிய தலைவர்கள் பலர் இன்று சில ஓட்டு பொறுக்கி அரசியல் வியாதிகளால் சிறு சாதி வட்டத்துக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். சாதி மத வேறுபாடின்றி மக்கள் பணி செயத பல தலைவர்களை (அவர் தங்கள் சாதியில் பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக) தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சில ஓட்டு பொறுக்கிகளால் அந்த தலைவர்கள் பிற சாதியினரால் வெறுக்கபடுகிறனர் என்பது நிதர்சனமான உண்மை.

தன் சொத்துபத்தை எல்லாம் விற்று ஏழைகளுக்கு குடுத்த முத்துராமலிங்க தேவர் இன்று தேவர் இனத்திற்க்கு மட்டுமே தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.சட்டமேதை அம்பேத்கார் தாழ்த்தபட்ட மக்களுக்கு மட்டுமே தலைவர் போல பிம்பங்களை உருவாக்கியுள்ளனர்.காமராசரை நாடார்களின் தலைவராக ஆக்கும் பணி செவ்வனே நடந்து வருகிறது. இதுபோன்று தலைவர்கள் பலரை சாதீய வட்டத்துக்குள் அடைப்பதால் தேவையற்ற காழ்ப்புணர்ச்சிகளே ஏற்படுகிறது. எல்லோராலும் ஏற்றுகொள்ளப்பட வேண்டிய தலைவர்கள் பிற சாதியினரால் வெறுக்கப்படகூடிய சூழல் நிலவுகிறது. தங்கள் சாதியை சார்ந்த தலைவர்களை கொண்டாடும்  அரசியல்வாதிகளின் நோக்கம் அந்த தலைவர்களின் கொள்கைகளையோ, சிந்தனைகளையோ, சாதனைகளையோ மக்களிடம் சேர்ப்பது அல்ல. இவர்களின் நோக்கமெல்லாம் தலைவர்களின் பெயரைசொல்லி ஓட்டு பொறுக்குவது மட்டுமே.

இந்த லிஸ்டில் புதிதாக இணைக்கப்பட்டிருப்பவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள். வ.உ.சி யின் குருபூஜையை முன்னிட்டு தற்போது பல இடங்களில் கட்டவுட்,பேனர்,போஸ்டர்களில் அமர்ந்துகொண்டு சிரிக்கிறார் வ.உ.சி. கீழே சிரித்துக்கொண்டிருக்கும்  வாழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கு வ.உ.சி யின் வாழ்க்கை பற்றி தெரியுமா?.வ.உ.சி எழுதிய நூல்களில் ஒன்றின் பெயராவது தெரியுமா?.இதுகாறும் வ.உ.சி மேல் வராத அக்கறை இவர்களுக்கு இப்போது வந்ததன் பிண்ணனி வரவிருக்கும் தேர்தலே.
வ.உ.சி யை வைத்து ஓட்டு பொறுக்க நினைக்கும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

தலைவர்களுக்கு சாதீய சாயம் பூசுவது. கடவுளுக்கு மதங்கள் பூசியுள்ள சாயம் போல் ஆகும்..ஒருவரின் கொள்கைகள் மற்றவருக்கு வெருப்பையே தரும்..
நாட்டிற்காக உழைத்த நல்லவர்களை, நல்லவர்களாக மட்டுமே பார்ப்போம்; சாதீய அடையாளங்களை மறுப்போம்.

47 comments:

தமிழ் உதயம் said...

உண்மையான பதிவு. நாம் என்று திருந்த போகிறோம்.

ஹரிஸ் Harish said...

@வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி தமிழ்

மதுரை சரவணன் said...

ஓட்டுக்கு தலைவர்களை சாதி சாயம் பூசும் சடங்கு என்று ஒழிகிறதோ அன்று தான் உண்மையான தேசிய உணர்வு தோன்றும் அது வரை தமிழனை மட்டுமல்ல , இந்தியனை எந்த நாட்டிலும் விரட்டத் தான் செய்வார்கள்....நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்

ஹரிஸ் Harish said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சரவணன்..

Unknown said...

Well said Friend.. Nicely Written.. Keep it up.. thanks..

Philosophy Prabhakaran said...

தமிழ்மணம் ஓட்டரசியல் பற்றி ஏதோ எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்...

கோவி.கண்ணன் said...

போறப் போக்கைப் பார்த்தால் அறிஞர் அண்ணா குருபூசை, தந்தை பெரியார் குருபூசை என்று துவங்கினாலும் வியப்படைய ஒன்றுமில்லை

Unknown said...

சில விஷயங்கள் சொன்னால் கோவித்து கொள்ளவில்லை என்றால் சொல்கிறேன்.
உண்மை எப்போதும் இனிப்பது இல்லை ..................
நீங்கள் விரும்பினால் ..............

விஷாலி said...

உங்க ஆதங்கம் உண்மை.

அருமையான பதிவு.

THOPPITHOPPI said...

அருமை

அதிகம் புத்தகம் படிப்பிங்களோ?

எஸ்.கே said...

நல்ல பதிவு!

ஹரிஸ் Harish said...

பதிவுலகில் பாபு said...

Well said Friend.. Nicely Written.. Keep it up.. thanks..
//நன்றி நண்பா..

ஹரிஸ் Harish said...

philosophy prabhakaran said...

தமிழ்மணம் ஓட்டரசியல் பற்றி ஏதோ எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்...//
:)..

ஹரிஸ் Harish said...

DrPKandaswamyPhD said...

Good Post.//
நன்றி ஐயா..

ஹரிஸ் Harish said...

கோவி.கண்ணன் said...

போறப் போக்கைப் பார்த்தால் அறிஞர் அண்ணா குருபூசை, தந்தை பெரியார் குருபூசை என்று துவங்கினாலும் வியப்படைய ஒன்றுமில்லை//
:)..நன்றி..

ஹரிஸ் Harish said...

விக்கி உலகம் said...உண்மை எப்போதும் இனிப்பது இல்லை ..................//

உண்மை..நன்றி.

ஹரிஸ் Harish said...

@மனசாட்சியே நண்பன் ...
@எஸ்.கே ...
நன்றி..

ஹரிஸ் Harish said...

THOPPITHOPPI said...அதிகம் புத்தகம் படிப்பிங்களோ?//

:)..கொஞ்சம்..

உமர் | Umar said...

நல்ல கட்டுரை.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒருவரைப் பற்றி எனக்கு வேறுபட்ட கருத்துகள் உள்ளன. அதனை இங்கே குறிப்பிட்டால், விவாதம் வேறு திசையில் சென்று விடும் என்பதால் தவிர்க்கின்றேன்.

நாட்டிற்காக உழைத்த நல்லவர்களை, நல்லவர்களாக மட்டுமே பார்ப்போம்; சாதீய அடையாளங்களை மறுப்போம்.

karthikkumar said...

வ.உ.சி. கீழே சிரித்துக்கொண்டிருக்கும் வாழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கு வ.உ.சி யின் வாழ்க்கை பற்றி தெரியுமா?.வ.உ.சி எழுதிய நூல்களில் ஒன்றின் பெயராவது தெரியுமா?///
எதுக்கு தெரியனும் பங்காளி தெரிஞ்ச அவன் அரசியலுக்கு தகுதியானவன் அல்ல

ஹரிஸ் Harish said...

எதுக்கு தெரியனும் பங்காளி தெரிஞ்ச அவன் அரசியலுக்கு தகுதியானவன் அல்ல//

ரைட்டு..அப்ப நீங்க அரசியல்வாதியா ஆக முடியாதா பங்கு?

ஹரிஸ் Harish said...

நாட்டிற்காக உழைத்த நல்லவர்களை, நல்லவர்களாக மட்டுமே பார்ப்போம்; சாதீய அடையாளங்களை மறுப்போம். //
நன்றி கும்மி..

Unknown said...

சாட்டைஅடி நண்பா .கருத்துக்கள் அருமை .ஆனாலும் இந்த அறிவாளி கூட்டங்கள் எந்தகாலத்திலும் திருந்த மாட்டார்கள் .அப்படியே திருந்தினாலும் அரசியல் வாதிகள் திருந்தவிடமாட்டார்கள் . சாட்டைஅடி தொடரட்டும்

ஹரிஸ் Harish said...

சாட்டைஅடி தொடரட்டும்//

நன்றி நண்பா..தொடருவோம்..

Unknown said...

காரணம் நம் ஊர் தலைவர்கள் எல்லோரும் நம் வரிப்பணத்தில் இருந்து செய்தாலும் தன் சொந்த பணத்தில் இருந்து செய்தது போல் போஸ்டர் அடிப்பதும்,பெரிய சாதனையாக சொல்லி மக்களை கடுப்பேத்துவதும்,பிராமாண்டமான ஊழலை செய்துவிட்டு,கேட்டால் அவர்கள் ஆட்சியில் நடக்கவில்லையா என்பதும் போன்ற செயல்கள்தான் இவர்களை தரமிழக்க செய்கிறது. இவர்கள் கறைபடிந்த கைகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பதால் கரைபடியாத தலைவர்களுக்கு பல்லக்கு தூக்க வேண்டியுள்ளது. இவர்கள் மம்தா பானர்ஜி யை பார்த்து படிக்கட்டும்.

மங்குனி அமைச்சர் said...

good one harish

ஹரிஸ் Harish said...

நன்றி..அமைச்சரே..

ஹரிஸ் Harish said...

இவர்கள் கறைபடிந்த கைகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பதால் கரைபடியாத தலைவர்களுக்கு பல்லக்கு தூக்க வேண்டியுள்ளது//

மிகச்சரி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியவன்..

ரஹீம் கஸ்ஸாலி said...

சா'தீய' அரசியலுக்குள் நம்அரசியல் தலைவர்கள் விழுந்து எவ்வளவோ நாளாச்சு.இந்த அரசியல்வியாதிகள் இப்போது தலைவர்களையும் ஜாதி வட்டத்திற்குள் அடைத்ததுதான் சமீபத்திய சாதனை. இப்போதெல்லாம் தேர்தலின்போது ஒரு தொகுதியில் மெஜாரிட்டியாக இருக்கும் ஜாதியை சேர்ந்த ஒருவனுக்குத்தான் சீட்டு வழங்கப்படுகிறது. எதிர்கட்சியும் அதே சாதிக்காரனுக்கு சீட்கொடுத்து ஓட்டுக்களை பிரித்து ஜாதி ஒற்றுமைக்கும் வேட்டு வைத்துவிடுகிறார்கள்.

Anonymous said...

சாதி அரசியலை அடிக்கடி கையில் எடுப்பவர் நல்ல அரசியல்வாதி அல்ல...நம் சமுதாயத்தின் நச்சு பாம்பு..தீய சக்தி...

Anonymous said...

தன் சொத்துபத்தை எல்லாம் விற்று ஏழைகளுக்கு குடுத்த முத்துராமலிங்க தேவர் இன்று தேவர் இனத்திற்க்கு மட்டுமே தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.//
ஆம்..தலைவர்களின் சாதியை கண்டுபிடித்து தமது சமூகத்திற்கு தலைவர் ஆக்கி கொள்கின்றனர்..இன்று அம்பேத்கார் படத்தை மாட்டி இருந்தால் நீங்க தலித்தா என்பார்கள்

ஹரிஸ் Harish said...

//இந்த அரசியல்வியாதிகள் இப்போது தலைவர்களையும் ஜாதி வட்டத்திற்குள் அடைத்ததுதான் சமீபத்திய சாதனை//

இது தான் என் வேதனை..கருத்துக்கு நன்றி நண்பா..

ஹரிஸ் Harish said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

//தலைவர்களின் சாதியை கண்டுபிடித்து தமது சமூகத்திற்கு தலைவர் ஆக்கி கொள்கின்றனர்..இன்று அம்பேத்கார் படத்தை மாட்டி இருந்தால் நீங்க தலித்தா என்பார்கள்//

உண்மை..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

எல் கே said...

என்ன பண்றது ??அரசியல் வியாதிகள் மட்டும் இல்லை. ஒரு சில பதிவர்களே அப்படிதான்...

ஹரிஸ் Harish said...

//ஒரு சில பதிவர்களே அப்படிதான்... //
இங்கயுமா?

NaSo said...

இனிமேல் பாருங்க ஒரு நாலு மாசத்திற்கு எல்லா தலைவர்கள் வீட்டிற்க்கும் சாதிக் கட்சி தலைவர்கள் தான் வருவாங்க. சாதிய நெனைச்சிதான் சீட்டே கொடுப்பாங்க. எப்ப இந்த நிலைமை மாறுமோ தெரியல? (அதுவரைக்கும் சுயேட்சையா நிற்க வேண்டியது தான்.)

ஹரிஸ் Harish said...

அதுவரைக்கும் சுயேட்சையா நிற்க வேண்டியது தான்//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

ம.தி.சுதா said...

வித்தியாசமான பதிவு வாழ்த்துக்கள்...
சகோதரம்....

ஹரிஸ் Harish said...

நன்றி..ம.தி.சுதா

http://rkguru.blogspot.com/ said...

///தலைவர்களுக்கு சாதீய சாயம் பூசுவது. கடவுளுக்கு மதங்கள் பூசியுள்ள சாயம் போல் ஆகும்..ஒருவரின் கொள்கைகள் மற்றவருக்கு வெருப்பையே தரும்.. ///

சரிதான்....

Unknown said...

சிறந்த பதிவு ஹரிஸ்

ஹரிஸ் Harish said...

@rk guru
@மகாதேவன்-V.K .

நன்றி..

Unknown said...

நண்பா தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்
http://neethiarasan.blogspot.com/2010/11/10.html

ரஹீம் கஸ்ஸாலி said...

நாங்களும் பதிவு போட்டுட்டோம்ல .பார்க்க....ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த 10 படங்கள்

ALHABSHIEST said...

அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.அடுத்த கும்மிக்கு சரியா இருக்குமில்லா.

ஹரிஸ் Harish said...

நன்றி..சிவா.

:)..

Unknown said...

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...