Wednesday, November 3, 2010

அசைவ கொத்து....

                                                            
         
            எனக்கு சிலர பாத்தாலே கடுப்பா இருக்கும்..என்னைய கடுப்பேத்துறதுல முக்கியமான ஆளு இந்த சுப்பிரமணியசாமி..இவர்(ன்) பேசுர தமிழக்கேட்டாலே பயங்கர எரிச்சலா இருக்கும்..புலிகள் மேலான தடையை நீக்குறது தொடர்பான விசாரணையில சம்மன் இல்லாம ஆஜராகி எக்ஸ்ட்ரா கடுப்பேத்துறார்(ன்)...(ஒரு முட்டை வீச்சு பத்தாது)
                                                        

        கவிஞர் காசிஆனந்தனின் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் வெளியிட்ட நிகழ்வுகள் அதிர்ச்சி ரகம். தான் மட்டுமே தமிழர்களுக்கு தலைவனா இருக்கனுமுனு நினச்சி, அப்பவே ஈழபோராட்ட்த்துக்கு குழிபறிச்ச கலைஞரை என்னனு சொல்ல.?.எனக்கு வரவர கலைஞர் மேல இருக்குற மரியாதை கொறஞ்சிகிட்டே வருது..
------------------------------------------------------------------------------------------------------        
       கடவுளுக்கு தொண்டு செய்வது புண்ணியம்னு சொல்லுவா..ஆனா அதுக்கு அரசாங்கத்துல பணமும் வாங்கிண்டு அது பத்தாதுனு சில கோரிக்கைகளை வச்சி உண்ணாவிரதம், உள்ளிருப்புனு போராட்டமும் நட்த்திருக்கா கோவில் பணியாளர்கள்..அதுல அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்,தரஊதியம் லாம் கேக்கிறது என்ன நியாயம்னு தெரியல...சரி எல்லாம் வல்ல பகவான்ட்ட கோரிக்க வைக்காம அரசாங்கத்துட்ட ஏன் வச்சானு தெரியல..உள்ள இருக்கது ஓண்ணுமில்லனு புரிஞ்சிட்டலோ என்னமோ..

         மற்ற மத்துல உள்ள மூடநம்பிக்கைய கிண்டி கிழங்கெடுக்குறதுல இந்த கிறிஸ்தவ சகோதரர்கள் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க..ஆனா அவங்க்கிட்ட இருக்க மூடநம்பிக்கைய என்னனு சொல்ல?.கல்லறை திருநாளாம்..ஆன்மாக்களுக்கு அஞ்சலியாம்..இதெல்லாம் எந்த பைபிள்ள சொல்லிருக்குனு தெரியல.
-------------------------------------------------------------------------------------------------

         அஞ்சு ஏக்கர்ல கஞ்சா சாகுபடிபண்ணி ஆப்பு வாங்கியிருக்கு ஒரு முன்னாள் காக்கி.இதுமாதிரி சில பொறம்போக்குங்க வேலைல இருக்கும் போதுதான் லஞ்சம்,மாமூல்னு காவல்துறை பேர கெடுக்குதுனா..வேலைய விட்டு போயிமா மொள்ளமாரிதனம் பண்ணுறது?..எனக்கென்னவோ இவன் கஞ்சா விக்கிறதுக்குன்னே வேலையவிட்டுடு  போய்ருப்பானு தோனுது

        மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயரை வைக்ககோரி முருகன்ஜி உண்ணாவிரதம் இருந்து கைதுசெய்யபட்டு இருக்கார்..இதுல நம்ம கேள்வி என்னனா ?...ஏம்பா ஜாதிகலவரத்துல பஸ்ஸ கொழுத்துறது பத்தாதா? விமான நிலையத்தையும் கொழுத்தனுமா..போங்கபூ!! போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கப்பூ..

---------------------------------------------------------------------------------------------------
(ஏன்டா உனக்கு இந்த வேலைனு கேக்குறீயளா..என்னை என்ன பண்ண சொல்லுதிக..பதிவு எழுதனுமுனு வந்தாச்சி இப்படி ஏதாவது நாலு விசயம் பேசனுமில்ல..அம்புட்டுதான்)

30 comments:

கும்மி said...

கொத்து நல்லா இருக்கு நண்பா.

ஹரிஸ் said...

நன்றி பாஸ்..

பட்டாபட்டி.. said...

ரைட்டு.. தொடருங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்படித்தான் அடிச்சி ஆடுங்க!

ஹரிஸ் said...

வருகைக்கு நன்றி பாஸ்...

@பட்டாபட்டி
சொல்லீட்டிங்கள்ள ..தொடர்ந்துருவோம்..

@பன்னிக்குட்டி ராம்சாமி
இறங்கீட்டம்ல இனி அடிச்சி ஆடவேண்டியதுதான்..

K R VIJAYAN said...

nice.continue

ஹரிஸ் said...

@கே.ஆர்.விஜயன்.
நன்றி சார்..

ரஹீம் கஸாலி said...

அட விடுங்க...சு.சாமி பற்றியெல்லாம் பதிவு எழுதி நேரத்தை வீணடிக்காதீங்க....அந்தாளு ஒரு காமெடி பீசு. எந்நேரமும் டென்சனா இருக்க அரசியல் என்ற திரைப்படத்தில் சாமி ஒரு காமெடி பீஸ்.

ஹரிஸ் said...

இந்த காமெடி பீஸ்..அடிக்கடி நம்மள கடுப்பேத்துது மை லார்ட்..

நா.மணிவண்ணன் said...

அந்த ஆளு காமெடி பீஸ் இல்லீங்க டம்மி பீஸ்

ஹரிஸ் said...

நா.மணிவண்ணன் said...

//அந்த ஆளு காமெடி பீஸ் இல்லீங்க டம்மி பீஸ்//

ரைட் பாஸ்..

philosophy prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

பார்வைகள் said...

அசைவ கொத்து வலைப்பூவின் செய்திகள் சின்ன....சின்னதாய் இருந்தது. இப்படித்தான் முதல் முயற்சியைத் தொடங்கவேண்டும். வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்

நிகழ்காலத்தில்... said...

நல்லா இருக்கு,,,

வாழ்த்துகள் நண்பரே

ஹரிஸ் said...

//philosophy prabhakaran //
//பார்வைகள் //
//நிகழ்காலத்தில்... said...//

வருகைக்கும் ...வாழ்த்துக்கும்..
தேங்ஸ் பாஸ்

பிரியமுடன் ரமேஷ் said...

நல்லா இருக்குங்க.. கண்டினியூ...

நிலாமதி said...

good posting

ஹரிஸ் said...

நன்றி நிலாமதி

well-wisher said...

ஏனுங்க எள ரத்தம்னு எகிறி குதிக்காம கொஞ்சம் கரிகால் சோழன் போல நரைமுடித்து முறை செய்யுங்கள் மன்னவா. எதிரியை சுளுவா எடைபோடக்கூடாதுன்னு நம்ம தாடி வைத்த தாத்தா வள்ளுவர் சொல்லியிருக்கிறாருங்களே. கருத்து வேறுபாடு இருக்குதுங்கிறதுக்காக சுப்ரமணியம் சுவாமியை குறைவா மதிப்பு போடக்கூடாதுங்க.
அப்புறம் இந்து கோவில் பணத்தை கொள்ளையடிக்கிற, கிறித்தவ, இசுலாமியர்களுக்கு கொட்டிக்கொடுக்கிற அரசாங்கம் அந்த ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் ஏன் தரக்கூடாது. அந்த ஊழியர்களிடம் நீங்கள் ஒரு புள்ளிவிபரம் எடுத்தால் அதிர்ந்து போவீர்கள். இதோ சில துளிகள் - சில கோவில்களில் பராமரிப்பு செலவுக்கு அரசு கொடுக்கும் பணம் 60 ரூபாய் - மன்னர் காலத்துத் தொகை. பூஜாரி சம்பளம் - 150 ரூபாய் - மாதத்திற்கு. விசுவ ஹிந்து பரிஷத் அவர்களை ஒருங்கிணைத்து பலமுறை போராடிய பின்னர் சற்று நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். மூன்று ரூபாய் கொடுத்து ஒன்றுக்கு போகவேண்டியிருக்க ஊதிய உயர்வு கேட்டு போராடுவது நியாயமானதே. அவர்கள் ஆசிரியர்களாக இருந்து தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடிகளை தங்கள் கையில் வைத்திருப்பவர்களானால் கேட்காமலேயே ஊதியஉயர்வு கிடைக்கும். இல்லாவிட்டால் அழுத பிள்ளைக்குத் தானே பால் கிடைக்கும்.

ஹரிஸ் said...

//கருத்து வேறுபாடு இருக்குதுங்கிறதுக்காக சுப்ரமணியம் சுவாமியை குறைவா மதிப்பு போடக்கூடாதுங்க.//

:)..குறைவா யாரு மதிச்சா..அவர பாத்தா கடுப்பா இருக்குனுதான் சொல்லுறேன்..

ஹரிஸ் said...

//ஊதிய உயர்வு கேட்டு போராடுவது நியாயமானதே//

கடவுள் தொண்டுன்னு வந்துட்டு ஊதியம் கேக்குறதே தப்பு..இதுல ஊதிய உயர்வு கேக்குறதுல என்ன நியாயம் இருக்கு?

ஹரிஸ் said...

//அழுத பிள்ளைக்குத் தானே பால் கிடைக்கும்//

அழுகுறவங்க கடவுள்ட்ட அழவேண்டியதுதான..அரசாங்கத்துட்ட ஏன் அழனும்..

polurdhayanithi said...

yarukkuthan ivana pidikkum
polurdhayanithi

well-wisher said...

கடவுள் தொண்டுன்னு வந்துட்டு ஊதியம்...
பாவம் கடவுள்னா என்னமோ இன்னொரு மாமா, மேலே இருக்கிறார்னு மதவெறியர்கள் போலத்தான் நீங்களும் நினைக்கிறீங்கன்னு நினைக்கிறேன். நீங்க கடவுள்னா யாருன்னு இன்னும் நல்லா தெரிஞ்சுக்கணும்ங்க.
தொண்டுன்னு நிரம்ப ஸுலபமா சொல்லிட்டீங்க புரிஞ்சது போல.
பெரிய பெரிய வார்த்தையெல்லாம் படபடன்னு கொட்டிட்டீங்க.
கடவுள் தொண்டு செய்யறவங்க மேலே இருந்து குதிக்கிறவங்களா. அவங்களுக்கு எல்லாம் வயிறு கிடையாதா. நடைமுறைக்கு ஒத்துவருவது போல பேசவேண்டும். வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு பேசறது அறிவாளிகளுக்கு அழகா. சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து. அடுத்தவன் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையேன்னான்னானாம். கோவில் பணத்தில் கொழுக்கிற அரசாங்கத்திற்கு கொடுத்தா என்னா குறைஞ்சா போயிடும். கோவில்ல பூசாரி வர்கம் மட்டுமில்லீங்கோ, நம்ப ஆளுங்களும் இருக்கிறாங்கோங்கோ. நம்ப ஆளுங்களும் பூசை பண்றாங்கோங்கோ.

ஹரிஸ் said...

நீங்க கடவுள்னா யாருன்னு இன்னும் நல்லா தெரிஞ்சுக்கணும்ங்க//

தெரியாம தான் கேக்குறேன் கொஞ்சம் கடவுள்னா யார்னு நீங்களே சொல்லுங்க..

சாந்திபாபு said...

எனங்களை அற்புதமாக தொகுது உள்ளது மிகவும் பிடித்திருந்தது

ஹரிஸ் said...

நன்றி சாந்திபாபு..

well-wisher said...

ஹரிஸ் said...
நீங்க கடவுள்னா யாருன்னு இன்னும் நல்லா தெரிஞ்சுக்கணும்ங்க//

தெரியாம தான் கேக்குறேன் கொஞ்சம் கடவுள்னா யார்னு நீங்களே சொல்லுங்க..
November 20, 2010 9:27 AM
நண்பரே, தங்களது திறந்த மனதைப் பாராட்டுகிறேன். இந்த விஷயத்தில் நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன். அதுவரையிலும் தாங்கள் http://srilalitambikaiparnasalai.blogspot.com/ இதில் மேயலாம். இதன் ஆக்குவோரைத் தொடர்பில் வைத்திருக்கலாம்.

well-wisher said...

http://sonjari.blogspot.com/ இதிலும் ஸஞ்சரிக்கலாம். ஆன்மிக விஷயங்கள் உள.

well-wisher said...

http://porkkalam.blogspot.com/ இதிலும் போராடலாம்