Friday, November 26, 2010

சோறு கிடைக்குமா..

                                          
*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்

*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.

*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு

அளவற்ற அறிவியல் வளர்ச்சியும் உற்பத்தி பெருக்கமும் உலகமயமாக்கலும்
இருக்கும் நிலையில் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் எங்ஙனம் நிகழ்கின்றன.


நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.5 சதவீதம் என்று மார்தட்டும் ஒரு நாட்டில் 30 சதவீதம் பேர் பசியால் வாடுகின்றனர் என்பது எத்தகைய முரண்.


நகர்மயமாக்கலால் விளைநிலங்கள் மனைகளாகின்றன என்பது ஒரு குற்றச்சாட்டு. இருக்கட்டும்.ஆனால் நாட்டின் தரிசு நிலங்கள் அப்படியே இருக்கிறதே. அதை ஏன் பண்படுத்தி விளைநிலங்களாக மேம்படுத்தவில்லை.

தரிசு நில மேம்பாட்டு திட்டம் என்று ஒன்று இருக்கிறது ஆனால் இதன் மூலம் பண்படுத்தபட்ட ஒரு செண்ட் நிலத்தை கூட நான் இதுவரை பார்த்ததில்லை.எங்கள் ஊரில் பெருநிலங்கள் இன்றும் தரிசாகவே கிடக்கின்றன.எங்கள் ஆட்சியில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தினோம்.எங்கள் ஆட்சியில் 60 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தினோம் என்று மாறி மாறி அறிக்கை விடும் கழக தலைவர்கள் அதில் ஒரு ஏக்கரையாவது என் கண்களுக்கு காட்டினால் புண்ணியமாக இருக்கும்.

விளைநிலங்களை தன் பிள்ளைகளுக்கும் பேரபிள்ளைகளுக்கும் வாங்கி போட்டு தரிசாக்குகின்றனர் பல பணம் கொழுத்த அரசியல் வாதிகளும் பெருமுதலாளிகளும்.இதனால் உணவின்றி பாதிக்கபடுபோவது என்னவோ என்னை போன்ற நடுத்தரவர்கமும் அந்த 30 சதவீதமும் தான்.

எனக்கு வருத்தமளிக்கும் மற்றொரு விடயம் உணவு பொருள்களை வீணாக்குவது.வீடுகளிலும் உணவகங்களிலும் பெருவிழாக்களிலும் வீணாக கொட்டும் உணவுகள் டன் கணக்கில் வரும். வீட்டிலும் உணவகத்திலும் பாதி உணவை உண்டுவிட்டு பாதியை விட்டு செல்லும் நபர்களை கண்டால் எனக்கு கோபம் கோபமாக வரும்.விழாக்களில் அளவிற்க்கு அதிகமாக சமைத்துவிட்டு மீதியை வீணாக குப்பையில் கொட்டுவதை கண்டு வருந்தியிருக்கிறேன்.

Ferdinand Dimadura வால் இயக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு பெர்லின் திரைப்படவிழாவில் விருதுவென்ற
குறும்படம் Chicken a la carte.(இது ஒரு உண்மை சம்பவம்) வசதிபடைத்தவர் உணவின்மீது காட்டும் அலச்சியத்தையும். ஏழைகள் உணவின் மீது காட்டும் பக்தியையும், உள்ளங்கை நெல்லிகனி போல தெளிவாக காட்டியிருப்பார் இயக்குனர். தங்களுக்கு கிடைத்த எச்சில் உணவிற்காக ஜெபம் செய்துவிட்டு உண்ணும் அந்த பக்தி நெகிழச்செய்யும்.இவை என்னுள் பல வினாக்களை எழுப்புகின்றன அவற்றை பிரிதொரு நாளில் விரிவாக பேசலாம்.( நேரம் இருப்பவர்கள் தயவுசெய்து கானொளியை காணவும் உணவின் அருமை புரியும்)
                            

’தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழிப்போம்’ என்றான் பாரதி..நாம் என்ன செய்யபோகிறோம்..

குறைந்தபட்சம் உணவினை வீணாக்குவதையாவது தவிர்க்கலாமே..


தொடர்ந்து பேசுவோம்......

70 comments:

Ramesh said...

அருமையான பதிவு ஹரிஸ்... நான் எங்க சாப்பிட உட்காந்தாலும்.. இந்த விசயத்துல ரொம்ப கறாரா இருப்பேன்.. எனக்கு போதும்னு சொன்னதுக்கு அப்புறமும் வெச்சிட்டாங்கன்னா.. அவ்லோதான்.. செம கடுப்பாகி கத்திடுவேன்.. அதே மாதிரி இலையில மிச்சம் வெக்கவே மாட்டேன்.. ஆனா முதலில் நம் மக்களுக்கு இலையில மிச்சம் வைக்காம சாப்பிட்டா கேவலம்னு யார் சொல்லிக் கொடுத்தாங்கன்னு தெரியலை.. அப்படி சாப்பிடும் என்னையும் இலையையும் கேவலமா ஒரு லுக் விட்டுட்டு போவாங்க.. போங்கடா போங்க உங்களை எல்லாம்.. சோறு இல்லாம நாலு நாள் ஒரு ரூம்ல கட்டி வெச்சாதான் புத்திவரும்னு நினைச்சுக்குவேன்..


மக்கள்லாம் ஏன் இப்படி இருக்காங்க?

Anonymous said...

எந்த ஒரு விசயமுமே, இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை.. அதற்கு திண்டாட்டம் வரும்போது தான் புரியப்படுகிறது.

ஹரிஸ் Harish said...

வாங்க ரமேஷ்..

நீங்களும் என்ன மாதிரிதானா..

ஹரிஸ் Harish said...

உண்மை தான் இந்திரா..

எஸ்.கே said...

மிக அருமையான பதிவு!
உணவிற்காக ஒரு காலத்தில் நாங்கள் கஷ்டப்பட்ட நாட்களும் உண்டு! உணவின் அருமை அது இல்லாத போதுதான் புரியும்!

சில பேர் சாப்பாட்டை பாதியில் வைத்து விடுவார்கள். அப்படி வீணாவது எத்தனை பேரின் உணவோ! உணவை ஒழுங்காக பயன்படுத்துவது அந்த உணவிற்கு நாம் அளிக்கும் மரியாதை!

ஹரிஸ் Harish said...

வாங்க எஸ்.கே

//உணவை ஒழுங்காக பயன்படுத்துவது அந்த உணவிற்கு நாம் அளிக்கும் மரியாதை!//

உண்மை..

நன்றி..

Unknown said...

நல்ல பதிவு ஹரிஸ்..

ஹரிஸ் Harish said...

நன்றி பாபு

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு நண்பா...


படிக்கும் காலங்களிலையே யாரவது இயலாதவர்கள் உணவுக்கென காசு கேட்டால் நாங்கள் தருவதில்லை.. அதற்கு பதிலாக நாங்கள் வைத்திருக்கும் மதிய உணவை கொடுத்துவிடுவோம்.. அது இன்றளவும் என்னிடமும் நண்பர்களிடமும் தொடர்கிறது..

உணவின் அருமை எனக்கு நன்றாக தெரியும்.. இல்லாமல் கிடந்த நாட்க்களை என்னால் எண்ண கூட முடியாது.. அதுவும் நமது சிங்கார சென்னையில்..

KANA VARO said...

நல்ல பதிவு சகா..

ஹரிஸ் Harish said...

வருகைக்கு நன்றி வெறும்பயன்

அது இன்றளவும் என்னிடமும் நண்பர்களிடமும் தொடர்கிறது//

தொடருங்கள்..நானும் துவங்குகிறேன்...

ஹரிஸ் Harish said...

@KANA VARO

நன்றி சகா..

idroos said...

தல வீடியோ ரொம்ப டச்சிங் ....ஆனா ஒரு டவுட்டு வீடியோ கிழக்காசியாவில எடுக்கப்பட்டது போல் உள்ளது இது ஆசியர்களை மட்டம் தட்டும் வீடியோவா..
ஏற்கனவே புஷ் ஒருமுறை உலகில் உணவு தட்டுப்பாட்டுக்கு காரணம் இந்தியர்கள்தான் எனவே அவர்கள் உணவை குறைத்துகொள்ளவேடும் என குடிபோதையில் அறிக்கை விட்டிருந்தார்.அதை எனக்கு இந்த வீடியோ மீண்டும் நினைவுபடுத்தியது....உண்மையில் சொல்லபோனால் மேற்கத்தியவர்கள்தான் உணவை வீணடிப்பவர்கள்..

idroos said...

கிடங்கில் எலிகளுக்கு தீனியாகும் நம் உணவை இந்திய அரசு விநியோகித்தாலாவது நம் மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்யும் ...ஆனால் கிடங்கில் உள்ள தானியங்களோ வீணாகி பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடுக்கடலில் கொட்டப்பட்டு மீனுக்கு உணவாகிறது..மனிதனை தவிர மற்றவர்ருக்குதான் இது பயன்படுகிறது..........

ஹரிஸ் Harish said...

உண்மை தான் ஜத்ரூஸ் மேற்கத்தியவர்கள்தான் அதிகம் உணவை வீணடிப்பவர்கள்..நாமும் தற்பொழுது அந்த நிலைக்கு மாறிவருகிறோம் என்பது தான் என் வருத்தம்..நமது வீடுகளிலும் உணவகங்களிலும் கூட உணவுகளை வீணடிப்பது தான் என் வருத்தம்..

karthikkumar said...

நல்ல பதிவு பங்கு. உங்களைபோல் தான் நானும். உணவை வீணாக்குவது பெரும் பாவம்தான் என்கிறது என் மனம்.

ஹரிஸ் Harish said...

@ஜத்ரூஸ்

அரசு உணவு தானியங்களை வீணடிப்பது மிக பெரிய தவறு..நமது அரசியல்வாதிகளுக்கு திட்டமிடவோ பகிர்ந்தளிக்கவோ நேரமில்லை(பதவியை காப்பாற்றுவது.யாகம் செய்வது.தொழிலதிபர்களுக்கு சொம்பு தூக்குவது என்று அவர்களுக்கு பல வேலைகள் இருக்கு)

ஹரிஸ் Harish said...

@கார்த்திக்குமார்

வாங்க பங்கு..

ஸேம் பிளட்..

மங்குனி அமைச்சர் said...

good post

ஹரிஸ் Harish said...

நன்றி அமைச்சரே..

சென்னை பித்தன் said...

தைத்திரிய உபநிடதம் சொல்கிறது
“அன்னம் ந பரிசக்‌ஷீத”(அன்னத்தை வீணாக்காதே.உணவு நன்றாகயில்லை என்று தள்ளக் கூடாது.நன்றாக இருப்பதையும்,அளவுக்கு மீறிப் பரிமாறிக் கொண்டு பின் எறியக் கூடாது)
“அன்னம் பஹுகுர்வீத”(அன்னத்தை மிகுதியும் உண்டாக்க வேண்டும். உணவை ஏராளமாக உண்டாக்குவதே,சமூகத்துக்குச் செய்யும் பேருதவி)

ஆனால் நீங்கள் கூறியது போல் இங்கே உணவு வீணாக்கப் படுகிறது.விளை நிலங்கள் வீட்டு மனைகளாகின்றன.
இனியொரு விதி செய்ய வேண்டும்.அதை எந்த நாளும் காக்க வேண்டும்-பாரதியின் விதி.
உங்கள் கருத்துக்களை எல்லோரும் சிந்திக்க வேண்டும்.

ஹரிஸ் Harish said...

@சென்னை பித்தன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
உங்கள் தொடர்வருகை என்னை மேலும் ஊக்கபடுத்தும்..

இனி ஒரு விதி செய்வோம்..

டிலீப் said...

அருமையான பதிவு

ஹரிஸ் Harish said...

நன்றி டிலீப்..

Unknown said...

நல்ல பதிவு நண்பா!
வாழ்த்துக்கள்! :)

Unknown said...

நமது முதல்வரைப்போல் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுக்க அங்கு ஆள் இல்லை என நினைக்கிறேன். நல்ல பதிவு.

Unknown said...

நல்ல பதிவு நண்பா .

ஹரிஸ் Harish said...

நன்றி.. ஜீ

ஹரிஸ் Harish said...

@இனியவன்
@நா.மணிவண்ணன்

நன்றி..

Arun said...

சகா புள்ளி விவரம் எல்லாம் தந்து கலக்கிட்டீங்க. பசி கொடுமையானது. முடிந்தவரை இல்லாதவருக்கு உணவளிக்க நாம் முயற்சிக்க வேண்டும் !!

ஹரிஸ் Harish said...

@அருண்

நன்றி சகா..கண்டிப்பாக முயற்சிப்போம்..

அருண் பிரசாத் said...

நல்ல பதிவு ஹரீஸ்!

முடிந்தா என் இந்த பதிவையும் படியுங்கள்

தனியொருவனுக்கு உணவில்லையெனில்....
http://arunprasathgs.blogspot.com/2010/08/blog-post_31.html

NKS.ஹாஜா மைதீன் said...

payanulla pathivu......super

Chitra said...

அந்த வீடியோ பார்த்ததில் இருந்து இன்னும் மீண்டு வரவே இல்லை.

settaikkaran said...

சிறந்த நோக்கம்; சிறப்பான இடுகை! அருமையான கருத்தோட்டம்!

Anonymous said...

மனசை கனக்க செய்து விட்டது பதிவு

Anonymous said...

அனைவருக்கும் உணவு ஓய் சேர வேண்டும்..அதுக்கு ஒரு வழி கண்டுபிடிங்கப்பா கடவுள்களே

Harini Resh said...

நல்ல பதிவு ஹரிஸ்.

//தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழிப்போம்’ என்றான் பாரதி..நாம் என்ன செய்யபோகிறோம்..

குறைந்தபட்சம் உணவினை வீணாக்குவதையாவது தவிர்க்கலாமே..//

அந்நியன் 2 said...

பசியின் கோரத்தில் சிக்கியிருக்கும் இந்தச் சிறுவனின் படமும், வீடியோ காட்ச்சியும் கண்ணீரைத்தான் வர வைக்கிறது அதுக்கு மேலே உங்களின் பதிவும் மனதை பனிக்கட்டியாய் கரைய வைக்கிறது.
வாழப் போகும் கொஞ்ச காலத்தில் தமக்குப் போக மீதமுள்ள சொத்தினை ஏழை எளிய மக்களுக்கு எல்லோரும் தானம் தருவாரேயானால் இது போன்ற பஞ்சங்களை போக்கிடலாம்.

என்னுடைய கருத்து :

உலக கிரிக்கெட் போட்டி மூலம் பல்லாயிரம் கோடி அமெரிக்கா டாலர்களை சம்பாதிக்கும் கிரிக்கெட் வாரியம், இந்த தொகையினை அனைத்தையும், இந்த ஏழை மக்கள் நல வாழ்விற்காக செலவழிக்க முன்வரனும்.
இதனை எல்லா நாடுகளும் வலியுறுத்தணும், இப்படி வருடம் வருடம் செய்வார்களானால், கிரிக்கெட் என்னேனே தெரியாத நானும், கிரிக்கெட்டைப் பார்ப்பேன். ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்.

முன்வருவார்களா ?

அந்நியன் 2

ஹரிஸ் Harish said...

@அருண் பிரசாத்

நன்றி,,படித்தேன் சிறந்த இடுகை

ஹரிஸ் Harish said...

@NKS.ஹாஜா மைதீன்

நன்றி..

ஹரிஸ் Harish said...

Chitra said...
அந்த வீடியோ பார்த்ததில் இருந்து இன்னும் மீண்டு வரவே இல்லை.//

:(..நன்றி..

ஹரிஸ் Harish said...

வருக சேட்டைக்காரன்

தங்களிம் முதல் வருகை ,..கருத்திற்க்கு நன்றி..

ஹரிஸ் Harish said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

நன்றி..

ஹரிஸ் Harish said...

நன்றி ஹரினி நாதன்

ஹரிஸ் Harish said...

@அந்நியன் 2 மொகமத்

தங்கள் கருத்திற்க்கு நன்றி..

எல்லோரும் தானம் தருவாரேயானால் இது போன்ற பஞ்சங்களை போக்கிடலாம்//
உண்மை தான்

உங்கள் எதிர்பார்ப்பு நியாயமானதுதான்..ஆனால் கிரிக்கெட் வாரியத்திற்க்கு ஐ.பி.எல்,ஏலம்,விளம்பரம் புண்ணாக்குனு ஏகப்பட்ட வேலை இருக்கு அவர்களுக்கு ஏழைகளை பற்றி நினைக்க எல்லாம் நேரம் இல்லை.பசியை அனுபவித்தவர்களால் தான் அதற்க்கு உதவ முடியும்.

உமர் | Umar said...

மிகவும் சிறப்பான பதிவு நண்பா!

மாணவன் said...

//
’தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழிப்போம்’ என்றான் பாரதி..நாம் என்ன செய்யபோகிறோம்.//

புகைப்படமும் வீடியோவும் மனதை என்னவோ செய்கிறது

அருமை நண்பா இப்படி ஒரு சிறந்த பதிவை உணர்வுகளுடன் பதிவு செய்தற்காக மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் பணி

விமலன் said...

பதிவும் காணொளியும் ரொம்பவே அருமை.

ஹரிஸ் Harish said...

@கும்மி
@மாணவன்
@விமலன்

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி..

Anonymous said...

நல்ல பதிவு நண்பா

ஹரிஸ் Harish said...

நன்றி பாலாஜி சரவணன்..

Unknown said...

சிந்திக்கவேண்டிய பதிவு

சாமக்கோடங்கி said...

//சத்தியமாக இந்தக் காணொளியைக் கண்டு அழுதேன்..//

இதே போன்று எம் நாட்டில் எத்தனை எத்தனை குழந்தைகள் பசியால் வாடுங்கின்றனவோ...?


இந்நிலை மாற வேண்டும்..

இன்னொன்றும் தோன்றியது.. அவர்கள் வீணடித்ததால் தான் அந்தக் குழந்தைகளுக்கு அன்றைக்கு ஒரு நல்ல விருந்து கிடைத்தது.. ஆனால் இதே போன்ற விருந்துதான் அவர்களுக்குக் கிடைக்கும் என்றால், அதை நினைத்து சோறு கிடைக்கும் ஒவ்வொரு மனிதனும் வெட்கித் தலை குனிய வேண்டும்..

சாமக்கோடங்கி said...

எங்களது நிறுவனத்திற்குத் தரப்படும் அதிகப் படியான உணவு வீணாகக் கூடாது என்று அதனை ஒரு அனாதைக் குழந்தைகள் பள்ளிக்கு அளிக்க ஏற்பாடு செய்தோம். ஆனால் இப்போது தானாகவே அது கிடைப்பதனால், அவர்களும் அதை வீணாகக்குவதாகக் கேள்விப் பட்டு வருத்தமடைந்தேன்..

r.v.saravanan said...

குறைந்தபட்சம் உணவினை வீணாக்குவதையாவது தவிர்க்கலாமே..


கண்டிப்பாக ஹரிஷ்

நல்ல பதிவு

ஹரிஸ் Harish said...

நன்றி அதிரை வாய்ஸ்..

ஹரிஸ் Harish said...

வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சாமகோடாங்கி..
, //அவர்களும் அதை வீணாகக்குவதாகக் கேள்விப் பட்டு வருத்தமடைந்தேன்.//

உண்மை தான்..இதை போன்று செயல்படுவதால் தான் உதவி செய்யும் எண்ணம் குறைந்துவருகிறது...

ஹரிஸ் Harish said...

@r.v.saravanan

நன்றி..

Sivatharisan said...

அருமையான பதிவு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மிகவும் சிறப்பான பதிவு...வாழ்த்துக்கள்

Geetha6 said...

useful post.

Geetha6 said...

உணவு பற்றி என்னுடைய ப்ளாக் பாருங்க !

http://udtgeeth.blogspot.com/2010/03/blog-post_24.html

Anonymous said...

என் பதிவகத்தை பின் தொடர ஆரம்பித்ததற்கு முதலில் என் நன்றி, ஹரிஸ்! சமூக அக்கறையுள்ள பதிவாக உங்கள் பதிவு அமைந்துள்ளது. இது உலகம் முழுமைக்கும் பொதுவான கட்டுரை என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து எழுதவும். உங்கள் இன்ன பிற பதிவுகளையும் படித்து கொண்டு இருக்கிறேன். நன்றி! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

ஹரிஸ் Harish said...

நன்றி பிரஷா
நன்றி கீதா
நன்றி சிவதர்ஷன்

ஹரிஸ் Harish said...

நன்றி சிவகுமார்..
உங்கள் தொடர்வருகை என்னை மேலும் ஊக்கப்படுத்தும்..

செல்வா said...

//விளைநிலங்களை தன் பிள்ளைகளுக்கும் பேரபிள்ளைகளுக்கும் வாங்கி போட்டு தரிசாக்குகின்றனர் பல பணம் கொழுத்த அரசியல் வாதிகளும் பெருமுதலாளிகளும்.இதனால் உணவின்றி பாதிக்கபடுபோவது என்னவோ என்னை போன்ற நடுத்தரவர்கமும் அந்த 30 சதவீதமும் தான்.//

உண்மைதான் ஹரிஷ் ., உங்கள் கோபம் புரிகிறது ..!!

தமிழ்மலர் said...

இந்த இரவு எத்தனை குழந்தைகள் பட்டினி மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றனவோ ?

இறைவா நீ குறைந்தபட்சம் குழந்தைகளுக்காகவாவது பட்டினிகொடுமையை கொடுக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?

ஹரிஸ் Harish said...

நன்றி..செல்வா..

ஹரிஸ் Harish said...

நன்றி..தமிழ் மலர்..