Monday, November 29, 2010

என்னடா விளம்பரம்..

                                  
விளம்பரங்களின் காதலன் நான்.ஒவ்வொரு முறையும் புதுபுது விளம்பரங்களை பார்க்கும் போது அவை என்னுள் ஒரு இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்துகிறது.சில நிமிட கதைகள் விளம்பரங்கள்.சில நொடி கவிதைகள் விளம்பரங்கள்.நான் ஒரு விளம்பரபட இயக்குனரோ விளம்பர வழங்குனரோ இல்லை.விளம்பரங்களின் ரசிகன் நான்.விளம்பரங்களின் காதலன் நான்.

எப்போது இருந்து இந்த காதல் வந்தது என்று தெரியவில்லை. கையில் ரிமோட் இருந்தால் விளம்பரங்களின் ஊடே வேறு வேறு நிகழ்ச்சிக்கு தாவும் மனிதர்களின் இடையே.விளம்பரங்களின் ஊடே வேறு வேறு விளம்பரங்களை தேடும் வித்யாசமான நோய் இது.

சிறு வயதில் என்னிடம் ’என்ன ஆச்சு?’ என்று யாராவது கேட்டால் ’குழந்த அழுகுது --- உட்வர்ட்ஸ் குடுக்க சொல்லு ’ என்று சொல்லிதிரிவேன். ஹூடி பாபா ஹூடி பாபா என்று காற்றில் பறந்து வருவேன்.என் பேச்சின் ஊடே விளம்பர வார்த்தைகள் சரளமாக கலந்து வரும்.

’அம்மா எனக்கு துணி வேண்டாமா..துணி ஈரமா இருக்கு..துணி அன்கம்பர்டபிளா இருக்கு’ என்று வரும் நாப்கின் விளம்பரம் என் வாழ்க்கையில் மறக்கமுடியா விளம்பரம். என் அம்மா ’டேய் துணிய மாத்துடா’னு சொல்லும் போதெல்லாம் ‘அம்மா எனக்கு துணி வேணாமா’ என்று சொல்லி அடிவாங்கியிருக்கிறேன்.(என்னா அடி). நாப்கின் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் இந்த விளம்பரத்தில் வரும் வெறும் வார்த்தைகள் என்னை ஈர்த்திருக்கின்றன.

எங்கேனும் காபி குடிக்க நேர்ந்தால் நரசூஸ் காப்பியின் தாக்கத்தில் ‘பேஸ் பேஸ் நன்னாயிருக்கு என்பேன்.’மாமி இது பில்டர்காபி?’ என்று கேட்டு ’இது புரூடா’ என்று சொல்லுவார்கள் என்று எதிர் பார்ப்பேன்.ஆனால் யாரும் இதுவரை சொன்னதில்லை..

என்னடா விளம்பரம் என்கிறீர்களா.விளம்பரம் ஒரு சாதாரண வியாபார உத்தி அல்ல.அது ஒரு கலை.பொருளாதார வளர்ச்சியை விளம்பரங்களுக்கு முன் விளம்பரங்களுக்கு பின் என்று பிரிக்கலாம்.விளம்பரங்களின் தாக்கம் அத்தகையது.

விளம்பரங்களின் தேவைகளையும் விளைவுகளையும், நான் ரசித்த விளம்பரங்களின் ஊடே பேச விளைகிறேன் அவ்வளவே...

தொடர்ந்து பேசுவோம்....

69 comments:

பிச்சைக்காரன் said...

நல்ல ஆரம்பம்...
தொடருங்கள்

ஹரிஸ் Harish said...

நன்றி பார்வையாளன்..

தல தளபதி said...

ரெடி ஸ்டார்ட்... மீசிக்...

ஹரிஸ் Harish said...

ஓ.கே..தல..அவ்ளவுதான்..

Anonymous said...

விளம்பரம் தொடருமா?

விளம்பர இடைவேளையின்றி தொடருங்கள்.

nis said...

ம்ம்,, விளம்பரங்கள் தான் சிலவற்றின் வெற்றி தோல்வியையே தீர்மானித்து விடுகிறது.
நகைச்சுவையான விளம்பரங்களை பற்றியும் எழுதுங்கள் ஹரிஸ்

Anonymous said...

இதுவரை வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்த நான் இப்போது பதிவராகவும் இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளேன். நடைபயில இல்லை இல்லை தவழ ஆரம்பித்திருக்கும் இந்த குழந்தையையும் வாக்களித்து பின்னூட்டமிட்டு கை தூக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

எஸ்.கே said...

நல்ல டாபிக்! தொடருங்கள்!

Ramesh said...

நானும் ஒரு விளம்பரக் காதலனே.. ரிமோட் எடுத்தால் விளம்பரத்தைத்தான் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருப்பேன்... ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு... இப்போதெல்லாம்.. அப்படிப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.. இப்போது வரும் விளம்பரங்கள் அந்த விளம்பரங்கள் போல் இல்லை என்றே தோன்றுகிறது எனக்கு... உண்மையில் நம் இருவரின் ரசனையும் அதிகம் ஒத்துப் போவதாய் இருக்குன்னு நினைக்கிறேன்.. சோறு கிடைக்குமா பதிவிலும்.. அதேதான் என் உணர்வாக இருந்தது...

அஞ்சா சிங்கம் said...

நல்ல ஆரம்பம் வாழ்த்துக்கள்

Anonymous said...

நைஸ்.. தொடருங்கள் பாஸ்

idroos said...

Vithyaasamana padhivu

Unknown said...

தொடருங்கள்! :-)

வைகை said...

பாஸ் உங்க விளம்பரத்துல ஸ்னேஹா, நயந்தாராவேல்லாம் வருவாங்களா!!!!!! ( எல்லாம் ஒரு வறட்சிதான்!!!!)

சம்பத்குமார் said...

தல ! இடைவெளில தான் விளம்பரம் வரணும் , விளம்பரத்துல இடைவெளி வர கூடாது , அதனால இடைவெளி விடாமல் தொடருங்கள் , நன்றி

சம்பத்குமார் said...

தல ! இடைவெளில தான் விளம்பரம் வரணும் , விளம்பரத்துல இடைவெளி வர கூடாது , அதனால இடைவெளி விடாமல் தொடருங்கள் , நன்றி

பாலா said...

விளம்பரம் என்பது பார்வையாளர்களை அட போட வைக்க வேண்டும். காலம் கடந்து அபிமானம் பெற்ற விளம்பரங்கள் மிக அதிகம். உதாரணமாக நரசூஸ் காஃபி விளம்பரம். ஆனால் இப்போது பல விளம்பரங்கள் சம்பந்தம் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அது பற்றி நான் முன்பு எழுதிய பதிவு

http://balapakkangal.blogspot.com/2010/05/blog-post_3651.html

Anonymous said...

உங்களுக்கு பிடிச்ச விளம்பரங்கள் பத்தி எழுதுங்க சூப்பரான தொடக்கம்

Unknown said...

இதன் மூலம் உங்களுக்கும் நல்ல விளம்பரம் கிடைக்க வாழத்துக்கள்

ரஹீம் கஸ்ஸாலி said...

நண்பரே...அதெல்லாம் வாசிங் பௌடர் நிர்மா காலத்துல.....இப்ப வர்ற விளம்பரமெல்லாம் ஆபாசமாகவும் அபத்தமாகவும்தான் தான் இருக்கு. ஜெனிலியா லிப்டில் போட்ட ஆட்டத்தை பார்த்திருப்பீங்களே....ஒரு பானை சோற்றுக்கு....

Unknown said...

நல்லா பேசுங்க நண்பா

ஹரிஸ் Harish said...

@இந்திரா

ஓ.கே..நன்றி..

Chitra said...

வித்தியாசமான டாபிக். கலக்குங்க!

NKS.ஹாஜா மைதீன் said...

விளம்பரத்தை விரும்பும் நீங்கள் ஒரு வித்தியாச விரும்பிதான்.....

Arun Prasath said...

மாம்ஸ் கலக்கிடீங்க... நாப்கின் மேட்டர் எல்லாருக்கும் நடந்திருக்கும் போல

Harini Resh said...

Supper Haris :)
நானும் விளம்பரங்களின் காதலி தான்
அற்புதமான தலைப்பு எழுதுங்கள் கண்டிப்பா பேசுவோம் :)

karthikkumar said...

ரைடு சாரி ரைட்டு. U CONTINUE

Unknown said...

"விளம்பரம் பாதி வியாபாரம் பாதி" என சும்மாவா சொன்னார்கள்

வித்தியாசமான பதிவு தொடருங்கள் நண்பா

சிவராம்குமார் said...

இப்ப வரும் பல ரெண்டரை மணி நேரப் படத்தை விட சில ரெண்டு நிமிஷ விளம்பரங்கள் அழகாக கதை சொல்கின்றது!!! வெயிட்டிங்!!!

ஹரிஸ் Harish said...

@NIS
நன்றி..கண்டிப்ப எழுதுறேன்..

ஹரிஸ் Harish said...

@ரியாஸ்..
நன்றி..

ஹரிஸ் Harish said...

//பிரியமுடன் ரமேஷ் said...
உண்மையில் நம் இருவரின் ரசனையும் அதிகம் ஒத்துப் போவதாய் இருக்குன்னு நினைக்கிறேன்..//

மகிழ்ச்சி..வருகைக்கு நன்றி..

ஹரிஸ் Harish said...

@எஸ்.கே
@பாலாஜி சரவணன்
@மண்டையன்
@ஜீ

நன்றி..

ஹரிஸ் Harish said...

நன்றி ஜத்ரூஸ்..

ஹரிஸ் Harish said...

வைகை said...

பாஸ் உங்க விளம்பரத்துல ஸ்னேஹா, நயந்தாராவேல்லாம் வருவாங்களா!!!!!! ( எல்லாம் ஒரு வறட்சிதான்!!!!)///

ஹி..ஹி..வரவச்சிருவோம்..

ஹரிஸ் Harish said...

சம்பத்குமார் said...

தல ! இடைவெளில தான் விளம்பரம் வரணும் , விளம்பரத்துல இடைவெளி வர கூடாது , அதனால இடைவெளி விடாமல் தொடருங்கள்//

சரி தல..கேப் விடாம அடிப்போம்..

ஹரிஸ் Harish said...

@பாலா..
உங்கள் வருத்தம் உண்மைதான்..அதை பற்றிய உங்கள் இடுகை அருமை..

ஹரிஸ் Harish said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said..
உங்களுக்கு பிடிச்ச விளம்பரங்கள் பத்தி எழுதுங்க சூப்பரான தொடக்கம்//

நன்றி..எழுதுகிறேன்..

ஹரிஸ் Harish said...

இனியவன் said...

இதன் மூலம் உங்களுக்கும் நல்ல விளம்பரம் கிடைக்க வாழத்துக்கள்//

ஹி..ஹி...நன்றி..

ஹரிஸ் Harish said...

@ரஹீம் கஸாலி
@நா.மணிவண்ணன்

நன்றி நண்பர்களே..

ஹரிஸ் Harish said...

Chitra said...

வித்தியாசமான டாபிக். கலக்குங்க!//

நன்றிக்கா..

ஹரிஸ் Harish said...

NKS.ஹாஜா மைதீன் said...

விளம்பரத்தை விரும்பும் நீங்கள் ஒரு வித்தியாச விரும்பிதான்.....//

:)..நன்றி..

ஹரிஸ் Harish said...

Arun Prasath said...

மாம்ஸ் கலக்கிடீங்க... நாப்கின் மேட்டர் எல்லாருக்கும் நடந்திருக்கும் போல//

எல்லாருக்கும்னா?,,, உங்களுக்கும் நடந்திருக்கும் போல மாப்பி..

நன்றி..

ஹரிஸ் Harish said...

Harini Nathan said...

Supper Haris :)
நானும் விளம்பரங்களின் காதலி தான்
அற்புதமான தலைப்பு எழுதுங்கள் கண்டிப்பா பேசுவோம் :)//

நன்றி ஹரினி,,பேசுவோம்,,,

ஹரிஸ் Harish said...

@karthikkumar

நன்றி பங்கு..

ஹரிஸ் Harish said...

@மகாதேவன்

நன்றி..

ஹரிஸ் Harish said...

சிவா என்கிற சிவராம்குமார் said...

இப்ப வரும் பல ரெண்டரை மணி நேரப் படத்தை விட சில ரெண்டு நிமிஷ விளம்பரங்கள் அழகாக கதை சொல்கின்றது!//

உண்மை தான்,.நன்றி,,,

Arun said...

மாப்ள தலைப்பு சூப்பர் சகா .. விளம்பரத்த வச்சே கலக்கிட்டீங்க !! விளம்பரமே இல்லாம :)

ஹரிஸ் Harish said...

நன்றி சகா..ஹி..ஹி...

ஜெயசீலன் said...

ரசித்தேன் நண்பா

Philosophy Prabhakaran said...

நாங்களும் அப்படித்தான்... தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட விளம்பரங்களை பற்றி அதிகம் ரசிப்போம்... எழுதுங்கள்...

ஹரிஸ் Harish said...

நன்றி..ஜெயசீலன்..

ஹரிஸ் Harish said...

நன்றி
பிராபாகரன்..

a said...

nice post.....

enakku piditha pazhaya vilamparam

WASHING POWDER NIRMA.....

பாலா said...

நான் விருதுநகரில் மையத்தில் இருக்கிறேன். நீங்களும் விருதுநகரா? என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே...

சௌந்தர் said...

இது நல்லா இல்லை சொல்லிட்டேன்... சொல்லவந்ததை இப்படி சொல்லாமல் போனா என்ன அர்த்தம், விளம்பரத்திலே ஒரு விளம்பரம் போடுறான்

ஹரிஸ் Harish said...

@சௌந்தர்

ஒரு சிறு விளம்பர இடைவெளிக்கு பின் தொடர்வோம்...

ஆமினா said...

நானும் கூட விளம்பரங்களை தான் விரும்பி பார்ப்பேன் :)

குறிப்பா ஜூஜூ விளம்பரம் :))))

ஹரிஸ் Harish said...

நன்றி ஆமினா...

செல்வா said...

//.விளம்பரங்களின் ஊடே வேறு வேறு விளம்பரங்களை தேடும் வித்யாசமான நோய் இது.//

நானும் அப்படித்தாங்க ., எனக்கும் விளம்பரங்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ..!!

செல்வா said...

//அது ஒரு கலை.பொருளாதார வளர்ச்சியை விளம்பரங்களுக்கு முன் விளம்பரங்களுக்கு பின் என்று பிரிக்கலாம்.விளம்பரங்களின் தாக்கம் அத்தகையது./

எனக்கு ரொம்ப பிடிச்சது வோடபோன் விளம்பரங்கள் ..!
அடுத்து கொஞ்ச நாளுக்கு முன்னாடி ICICI விளம்பரம் ஒண்ணு...
" நான் நிறைய தங்கப்பல்ல விதைசிருக்கேன் " அப்படின்னு அந்தப் சின்னப் பொண்ணு சொல்லும் பாருங்க ., ஹய்யோ .. செம செம .!!

செல்வா said...

மாப்ள ஹரிஷ் எங்கிருந்தாலும் எனது
thamizhbarathi@gmail.com
இந்த முகவரிக்கு ஒரு மின்னஞ்சலோ அல்லது மின் அரட்டைக்கான அழைப்போ விடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ..!!

சென்னை பித்தன் said...

சில விளம்பரங்கள் எத்தனையாண்டுகள் ஆனாலும் நினைவில் நிற்கின்றன.
தொடர்ந்து பேசுங்கள்;காத்திருக்கிறேன்.

Unknown said...

பதிவு அழகு.

நான் ஒன்னு சொல்லிகட்டுமா -
நீங்களும்
tv பாத்து வளந்த புள்ளயா .
அதான் same பீலிங்கு....

ஹரிஸ் Harish said...

நன்றி..

ஆமா பாஸ் சின்ன பிள்ளைல டிவிய விட்டா வேற எதுவும் தெரியாது..

Unknown said...

ஹரிஸ்.. எனக்கும் சிறு வயதில் விளம்பரங்கள் பிடிக்கும்.. தூர்தர்ஷனுக்குப் பிறகு சுவாரஷ்யமான விளம்பரங்கள் குறைந்துவிட்டது..

நாப்கின் மேட்டர் படிச்சு வாய்விட்டு சிரிச்சுட்டேன்.. :-)

நல்ல டாஃபிக்.. தொடருங்கள்..

ஹரிஸ் Harish said...

நன்றி..பாபு..தொடருவோம்..

ADMIN said...

//’’அம்மா எனக்கு துணி வேண்டாமா..துணி ஈரமா இருக்கு..துணி அன்கம்பர்டபிளா இருக்கு’ என்று வரும் நாப்கின் விளம்பரம் என் வாழ்க்கையில் மறக்கமுடியா விளம்பரம். என் அம்மா ’டேய் துணிய மாத்துடா’னு சொல்லும் போதெல்லாம் ‘அம்மா எனக்கு துணி வேணாமா’ என்று சொல்லி அடிவாங்கியிருக்கிறேன்.(என்னா அடி). //

என்னாலும் மறக்க முடியாது... ஏகப்பட்ட அலவல்களுக்கிடையே இந்த வரிகளை படித்த போது என்னையறியாமல் சிரிப்பு வந்துவிட்டது...

பலே! பலே..!! நன்னா எழுதியிருக்கீங்க..

நன்றி! வாழ்த்துக்கள்..!

ஹரிஸ் Harish said...

நன்றி தங்கம்பழனி..