Showing posts with label ரசித்தவை. Show all posts
Showing posts with label ரசித்தவை. Show all posts

Monday, November 29, 2010

என்னடா விளம்பரம்..

                                  
விளம்பரங்களின் காதலன் நான்.ஒவ்வொரு முறையும் புதுபுது விளம்பரங்களை பார்க்கும் போது அவை என்னுள் ஒரு இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்துகிறது.சில நிமிட கதைகள் விளம்பரங்கள்.சில நொடி கவிதைகள் விளம்பரங்கள்.நான் ஒரு விளம்பரபட இயக்குனரோ விளம்பர வழங்குனரோ இல்லை.விளம்பரங்களின் ரசிகன் நான்.விளம்பரங்களின் காதலன் நான்.

எப்போது இருந்து இந்த காதல் வந்தது என்று தெரியவில்லை. கையில் ரிமோட் இருந்தால் விளம்பரங்களின் ஊடே வேறு வேறு நிகழ்ச்சிக்கு தாவும் மனிதர்களின் இடையே.விளம்பரங்களின் ஊடே வேறு வேறு விளம்பரங்களை தேடும் வித்யாசமான நோய் இது.

சிறு வயதில் என்னிடம் ’என்ன ஆச்சு?’ என்று யாராவது கேட்டால் ’குழந்த அழுகுது --- உட்வர்ட்ஸ் குடுக்க சொல்லு ’ என்று சொல்லிதிரிவேன். ஹூடி பாபா ஹூடி பாபா என்று காற்றில் பறந்து வருவேன்.என் பேச்சின் ஊடே விளம்பர வார்த்தைகள் சரளமாக கலந்து வரும்.

’அம்மா எனக்கு துணி வேண்டாமா..துணி ஈரமா இருக்கு..துணி அன்கம்பர்டபிளா இருக்கு’ என்று வரும் நாப்கின் விளம்பரம் என் வாழ்க்கையில் மறக்கமுடியா விளம்பரம். என் அம்மா ’டேய் துணிய மாத்துடா’னு சொல்லும் போதெல்லாம் ‘அம்மா எனக்கு துணி வேணாமா’ என்று சொல்லி அடிவாங்கியிருக்கிறேன்.(என்னா அடி). நாப்கின் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் இந்த விளம்பரத்தில் வரும் வெறும் வார்த்தைகள் என்னை ஈர்த்திருக்கின்றன.

எங்கேனும் காபி குடிக்க நேர்ந்தால் நரசூஸ் காப்பியின் தாக்கத்தில் ‘பேஸ் பேஸ் நன்னாயிருக்கு என்பேன்.’மாமி இது பில்டர்காபி?’ என்று கேட்டு ’இது புரூடா’ என்று சொல்லுவார்கள் என்று எதிர் பார்ப்பேன்.ஆனால் யாரும் இதுவரை சொன்னதில்லை..

என்னடா விளம்பரம் என்கிறீர்களா.விளம்பரம் ஒரு சாதாரண வியாபார உத்தி அல்ல.அது ஒரு கலை.பொருளாதார வளர்ச்சியை விளம்பரங்களுக்கு முன் விளம்பரங்களுக்கு பின் என்று பிரிக்கலாம்.விளம்பரங்களின் தாக்கம் அத்தகையது.

விளம்பரங்களின் தேவைகளையும் விளைவுகளையும், நான் ரசித்த விளம்பரங்களின் ஊடே பேச விளைகிறேன் அவ்வளவே...

தொடர்ந்து பேசுவோம்....