Showing posts with label கொத்து. Show all posts
Showing posts with label கொத்து. Show all posts

Wednesday, December 1, 2010

அசைவ கொத்து 03

                                                
தினமும் கூச்சல் அமளி ஒத்திவைப்புனு பாராளுமன்றம் முடங்கி போய் கிடக்கு. தலைவர் ரித்திஸ் பாராளுமன்றத்துல பேசுவது போன்ற ஒரு புகைப்படத்தையாவது பாக்கனும்கிற என் ஆசை இந்த முறையும் நிராசை ஆகிவிடும் போல (ஒரு பேனர் அடிக்கலாம்னு தான்).இப்படியே ஒத்தி வச்சிகிட்டே போனா 2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தைவிட, பாராளுமன்றம் நடைபெறாமல் வெட்டியாக செலவாகும் பணம் அதிகமாக போனாலும் போகலாம்
******************************************************************************
ஆந்திர அரசியல்ல காங்கிரஸோட கோஷ்டி, குடிமிபிடி, பதவி சண்டைலாம் சூப்பரா போய்கிட்டு இருக்கு.கிரண்குமார் ரெட்டியும் அன்னை சோனியாஜியும் ஆளையும் டம்மி ஆக்கி ஆட்சியையும் தக்க வச்சிக்கிற கேம் சூப்பரா விளையாடுறாங்க.சிரஞ்சீவிகாரோட கூட்டணி போட்டு எப்படியும் ஆட்சிய காப்பாத்திருவாங்க.ஆனா இதே மாதிரி ஒரு நிலமை தமிழ்நாட்டுல வந்து நம்ம கேப்டன் கையில ஒரு இருபது எம்.எம்.ஏ இருந்துருந்தா, துணை முதலமைச்சர் பதவி. அனைவருக்கும் அமைச்சர் பதவினு ஜமாய்ச்சிருப்பாரு.
******************************************************************************
நடிகர் விஜயகுமாருக்கும் அவர் பொண்ணு வனிதாவுக்கும் என்ன பிரச்சனைனு சரியா தெரியல.அவங்க மாறி மாறி குடுக்குற பேட்டிகளையும் அறிக்கைகளையும் பார்த்த ச்சீ..சீ.... எப்படியோ நக்கீரனுக்கு இன்னும் ஒரு ரெண்டு மூனு வாரத்துக்கு கவர் ஸ்டோரி பஞ்சமில்ல.
******************************************************************************
நம்ம பா.ம.க தலைவர் அண்ணன் கோ.கா.மணி கூட்டணிக்கு இன்னும் காலம் கனியலனு சொல்லிருக்காரு.இதுக்கு எதுக்கு காய் கனினு(டபுள் மீனிங் இல்ல)பேசிகிட்டு. தேர்தல் தேதி அறிவிச்சதுக்கு அப்புறம் பொதுக்குழு செயற்குழுவ கூட்டி எந்த கூட்டணினு ஒட்டு பெட்டி வச்சி வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டியது தான் (நம்ம ஜனநாயக ரீதியா போவோம் சார்) என்ன அவங்க நம்மள சேக்குறதுக்கு தான் எப்படி முடிவெடுப்பனுங்கனு தெரியல.

நம்ம முதல்வரை சந்திச்சு சமூக பொருளாதார கல்வி நிலையை அடிப்படையாக கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனுமுனு வழியுருத்துனாராம்.சமூக பொருளாதார நிலமையை பதிவு செய்தால் அரசின் இட ஒதுக்கீடு, இன்ன பிற சலுகைகள் வழங்க உதவியா இருக்கும்.இதுல சாதி என்ன வெங்காயத்துக்குனு தெரியல.எங்களுக்கு இவ்வளவு சாதி வோட்டு இருக்குனு காட்டி பேரம் பேசுரதுக்கு இல்லாம வேற என்னத்துக்கு?.
******************************************************************************
நமக்கெல்லாம் மட்டமான ரசனையாம். எப்படி நடிச்சாலும் பாப்போமாம் சொல்லிருக்காரு நம்ம ஆர்யா.என்ன பண்ணுறது விஜய் படமெல்லாம் ஓடும் போது இப்படி ஒரு நினைப்பு வரத்தான செய்யும்.ஆனா விஜய்க்கு சிலை வச்சி மலையாளத்தான் ரசனை என்னனு காட்டிடாங்க.
******************************************************************************
இப்பவே புத்தாண்டு குறுஞ்செய்திகள் வர ஆரம்பிச்சிடுச்சி. First wishes..Best wishes னு இன்னும் எத்தனை வரும்னு தெரியல.மெஸேஜ டெலிட் பண்ணுறதுக்கு இனி எக்ஸ்ட்ரா டைம் ஒதுக்கணும்..

அம்புட்டுதான்..தொடர்ந்து கொத்துவோம்...

Wednesday, November 24, 2010

அசைவ கொத்து 02

ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பிய ராஜாவை மேளதாளத்தோடு வரவேற்று அன்பை காட்டியுள்ளனர் மக்கள்.தனக்கு உதவி செய்தவன் திருடனாகவோ ரௌடியாகவோ இருந்தாலும் அவனை ஆதர்சன நாயகனாக கொண்டாடுவது சினிமாவில் மட்டுமே இருக்கும் என எண்ணினேன்.நாங்கள் நிஜத்திலும் அப்படித்தான் என காட்டிவிட்டனர் மக்கள்.

****************************************************************************

நாகர்கோவிலில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் தனது வகுப்பாசிரியரை தாக்கியிருக்கிறார்.ஆசிரியர் மாணவர்களை அடிப்பது மாறி இப்பொழுது மாணவர்கள் ஆசிரியரை அடிக்க துவங்கியுள்ளனர்.சம்பவம் நடந்ததற்க்கான காரண காரியங்கள் ஆராயபட வேண்டியது அவசியம். ஆனால் எனது ஆச்சர்யம் ,ஒரு ஆசிரியரை அடிக்கும் அளவிற்க்கு தைரியம் இம்மாணவனுக்கு எங்கிருந்து வந்தது?.ஆசியரின் கண்டிப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதை விடுத்து அவரை கேலி செய்யவும் எதிர்க்கவும் வழிகாட்டியது எது?.நமது தமிழ் சினிமாக்களும் இதற்க்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். ஆசிரியர்களை மொக்கை,அருவை,சருக்குமரம் என்று கேலி செய்வதும் தண்டிக்கும் ஆசிரியரை எதிர்த்து அடிப்பதும் இங்கிருந்து தான் வந்திருக்கும்.

******************************************************************************
                                                  
கடந்த சில நாட்களாக வலையுலகில் லிவிங் டூ கெதர் புயல் அடித்தது, அடிக்கிறது.என்று கரையை கடக்கும் என்று தெரியவில்லை.நமது மங்குனியார் பாணியில் எனது கருத்தை பின்னர் சொல்லுகிறேன் ல்விங் டூ கெதரை ஆதரிப்பவர்கள் பிளஸ் ஓட்டும் எதிர்ப்பவர்கள் மைனஸ் ஓட்டும் போடுங்கள் என்று பதிவிட்டிருந்தால் தமிழ்மணத்தில் வரலாறு காணாத ஓட்டுக்கள் பதிவாகியிருக்கும்

இருவர் மனமொத்து சேர்ந்து வாழ முடிவெடுத்தபின் அவர்கள் திருமணம் செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன?.திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதால் சமுதாயத்திற்க்கோ பிறருக்கோ எந்த இழப்பும் இல்லை. அதனால் வரும் நன்மை தீமைகள் சம்மத்தபட்டவரையே சாரும். சரியான புரிந்துகொள்ளுதலின் படி இவ்வாழ்க்கையின் சாதக பாதகங்களை அறிந்தே சேர்ந்து வாழ்கிறார்கள்.எதையும் ஏற்க்கும் அல்லது எதிர்கொள்ளும் மனதிடம் அவர்களுக்கு உள்ளது .மற்றபடி திருமணமின்றி சேர்ந்து வாழ்பவர்களை விமர்ச்சிப்பதும் அவர்கள் வாழ்க்கையில், உரிமையில் மூக்கை நுழைப்பதும் முற்றிலும் தவறு..இது ஒரு நிலை..

பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த திருமண முறைகள் இன்று இல்லை. இன்று சாதி மத மறுப்பு திருமணங்களும் காதல் திருமணங்களும் ஏற்றுக்கொள்ளபடுகிறது.விதவை மறுமணமும் விவாகரத்தானோர் மறுமணமும் இயல்பாய் நடக்கிறது.கைபேசியின் உதவியால் திருமணத்திற்க்கு முன்பே இருபாலரும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கின்றனர்.திருமண கட்டுப்பாட்டால் சிறு சிறு ஊடல்கள் நாளடைவில் இணக்கமாக மாற வாய்ப்புகள் அதிகம்.  திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் அன்பும் புரிந்து கொள்ளுதலும் சுதந்திரமும் அதிகமாகவே இருக்கிறது.இன்னிலையில் திருமணமின்றி சேர்ந்து வாழ்தல் தேவையில்லாத ஒரு தவறான வழிகாட்டல்.இது ஒரு நிலை

அவரவர்க்கு அவரவர் நிலை..திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும் திருமணமின்றி சேர்ந்து வாழ்ந்தாலும் இரு மனங்கள் இணைந்தால் தான் நிலையான வாழ்க்கை

டிஸ்கி: படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்வர்களுக்கு...லிவிங் டூ கெதர் என்று கூகுளில் தேடினால் இந்த படம் தான் வருகிறது..கேள்வியை கூகுளாண்டவனிடம் கேக்கவும்..

கொத்து தொடரும்...

Wednesday, November 3, 2010

அசைவ கொத்து....

                                                            
         
            எனக்கு சிலர பாத்தாலே கடுப்பா இருக்கும்..என்னைய கடுப்பேத்துறதுல முக்கியமான ஆளு இந்த சுப்பிரமணியசாமி..இவர்(ன்) பேசுர தமிழக்கேட்டாலே பயங்கர எரிச்சலா இருக்கும்..புலிகள் மேலான தடையை நீக்குறது தொடர்பான விசாரணையில சம்மன் இல்லாம ஆஜராகி எக்ஸ்ட்ரா கடுப்பேத்துறார்(ன்)...(ஒரு முட்டை வீச்சு பத்தாது)
                                                        

        கவிஞர் காசிஆனந்தனின் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் வெளியிட்ட நிகழ்வுகள் அதிர்ச்சி ரகம். தான் மட்டுமே தமிழர்களுக்கு தலைவனா இருக்கனுமுனு நினச்சி, அப்பவே ஈழபோராட்ட்த்துக்கு குழிபறிச்ச கலைஞரை என்னனு சொல்ல.?.எனக்கு வரவர கலைஞர் மேல இருக்குற மரியாதை கொறஞ்சிகிட்டே வருது..
------------------------------------------------------------------------------------------------------        
       கடவுளுக்கு தொண்டு செய்வது புண்ணியம்னு சொல்லுவா..ஆனா அதுக்கு அரசாங்கத்துல பணமும் வாங்கிண்டு அது பத்தாதுனு சில கோரிக்கைகளை வச்சி உண்ணாவிரதம், உள்ளிருப்புனு போராட்டமும் நட்த்திருக்கா கோவில் பணியாளர்கள்..அதுல அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்,தரஊதியம் லாம் கேக்கிறது என்ன நியாயம்னு தெரியல...சரி எல்லாம் வல்ல பகவான்ட்ட கோரிக்க வைக்காம அரசாங்கத்துட்ட ஏன் வச்சானு தெரியல..உள்ள இருக்கது ஓண்ணுமில்லனு புரிஞ்சிட்டலோ என்னமோ..

         மற்ற மத்துல உள்ள மூடநம்பிக்கைய கிண்டி கிழங்கெடுக்குறதுல இந்த கிறிஸ்தவ சகோதரர்கள் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க..ஆனா அவங்க்கிட்ட இருக்க மூடநம்பிக்கைய என்னனு சொல்ல?.கல்லறை திருநாளாம்..ஆன்மாக்களுக்கு அஞ்சலியாம்..இதெல்லாம் எந்த பைபிள்ள சொல்லிருக்குனு தெரியல.
-------------------------------------------------------------------------------------------------

         அஞ்சு ஏக்கர்ல கஞ்சா சாகுபடிபண்ணி ஆப்பு வாங்கியிருக்கு ஒரு முன்னாள் காக்கி.இதுமாதிரி சில பொறம்போக்குங்க வேலைல இருக்கும் போதுதான் லஞ்சம்,மாமூல்னு காவல்துறை பேர கெடுக்குதுனா..வேலைய விட்டு போயிமா மொள்ளமாரிதனம் பண்ணுறது?..எனக்கென்னவோ இவன் கஞ்சா விக்கிறதுக்குன்னே வேலையவிட்டுடு  போய்ருப்பானு தோனுது

        மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயரை வைக்ககோரி முருகன்ஜி உண்ணாவிரதம் இருந்து கைதுசெய்யபட்டு இருக்கார்..இதுல நம்ம கேள்வி என்னனா ?...ஏம்பா ஜாதிகலவரத்துல பஸ்ஸ கொழுத்துறது பத்தாதா? விமான நிலையத்தையும் கொழுத்தனுமா..போங்கபூ!! போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கப்பூ..

---------------------------------------------------------------------------------------------------
(ஏன்டா உனக்கு இந்த வேலைனு கேக்குறீயளா..என்னை என்ன பண்ண சொல்லுதிக..பதிவு எழுதனுமுனு வந்தாச்சி இப்படி ஏதாவது நாலு விசயம் பேசனுமில்ல..அம்புட்டுதான்)