Friday, December 3, 2010

என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா..

வீட்டை விட்டு ஓடும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.எது இவர்களை இவ்வாறு ஓடச்செய்கிறது?.இப்படி ஓடிவருபவர்களில் எத்தனை பேர் வாழ்வில் நின்று வென்றிருக்கிறார்கள்?

வீட்டைவிட்டு ஓடி வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆசிரியர் கண்டிப்பு,படிப்பில் வெறுப்பு,வீட்டில் கண்டிப்பு, வறுமை என ஓராயிரம் கதைகள் இருக்கும்.

பெருநகருக்கு ஓடிவரும் அவர்கள், கையிலிருக்கும் காசு கரையும் வரை இதுவல்லவோ வாழ்க்கை என்று சுற்றிதிரிகின்றனர்.பின்னர் தான் இது வேறு உலகம் என்பதை புரிந்து கொள்கின்றனர். அவர்களின் ஆசைகள் வெகுவிரைவில் நிராசை ஆகிவிடுகின்றன.பெருநகரம் தன் இருண்ட பக்கத்தை அவர்களுக்கு காட்டத்தொடங்குகின்றது.வறுமையும் நெருக்கடியும் அவர்களை துரத்த துவங்குகிறது.உயிர் வளர்க்க ஏதோ ஒரு உணவகத்திலோ கடையிலோ வேலைக்கு சேர்கின்றனர்.பெருநகரத்தின் இயந்திரவாழ்க்கையில் அவர்களும் ஓர் இயந்திரமாய் இணைந்து போகிறார்கள்.

இந்த தொடர் சம்பவத்தை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்கிறோமே எப்படி?சாலை சிறுவர்கள் மீதும் தொழிற்சலையில் உள்ள சிறுவர்கள் மீதும் நாம் அக்கறைகாட்ட மறக்கிறோமே ஏன்?

வீட்டை விட்டு நகரத்திற்க்கு ஓடி வருபவர்கள், பின்னர் பெரும் செல்வந்தர்கள் ஆவது போன்றும், குற்றப்பிண்ணனியில் சுகமாய் இருப்பது போன்றும் சித்தரிக்கப்படும் திரைப்படங்கள் சிறுவர்களுக்கு வழிகாட்டி செல்கின்றன.எனக்கு தெரிந்து இதிலிருந்து மாறுபட்டு நிற்பது வசந்தபாலனின் வெயில் மட்டுமே.வீட்டை விட்டு ஓடி போனவரின் வறுமை,இயலாமை,ஏக்கம்,பாசம் ஒவ்வொன்றையும் இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருப்பார்.
                                          

சிறு கண்டிப்புக்கு அஞ்சி விடுதியிலிருந்து ஓடிவந்தவன் நான். இது நடந்தது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு.ஓட்டமும் நடையுமாயும்,மாட்டுவண்டி,லாரி,ரயில் என்றும் தொடர்ந்த பயணத்தில் ஆரணியிலிருந்து விருதுநகர் வந்து சேர மூன்று நாட்களாகியிருந்தது.

‘யண்ணே ஒத்த ரூவா குடுணே மிட்டாய் வாங்கிகிறேன்’ என்று எப்போதும் சிரித்தமுகத்துடன் என்னை சுற்றிவரும் மகாராஜா சென்றவாரம் ஒரு நாள் வீட்டைவிட்டு ஓடிப்போனான்.அவன் தாய் அவனுக்கு மிட்டாய் வாங்க காசு கொடுக்கவில்லையாம்.அன்று இரவு அந்த தாய் பெருங்குரலெடுத்து கதறியது என் இதயத்தில் ரணமாய் பதிந்து போனது.இரண்டு நாளில் மகாராஜா வந்துவிட்டான்.ஆனால் அந்த இரவும் அந்த தாயின் கதறலும் என் மனக்கண் முன் வந்துகொண்டே இருக்கிறது.

நான் பின்னோக்கி செல்கிறேன்.அன்று நான் ஓடி போனபோதும் என் தாய் இப்படி தானே கதறியிருப்பாள்.அம்மா அன்று உங்களை அதிகம் அழவைத்துவிட்டேனோ.என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா.

65 comments:

எஸ்.கே said...

மனம் கனக்கிறது நண்பரே!

test said...

//வசந்தபாலனின் வெயில் மட்டுமே.வீட்டை விட்டு ஓடி போனவரின் வறுமை,இயலாமை,ஏக்கம்,பாசம் ஒவ்வொன்றையும் இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருப்பார்//
True!
good post!

எல் கே said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை ஹரிஸ். எப்பவ்யும் உங்கள் தளத்திற்கு வந்தால் சிரித்துவிட்டு செல்வேன்,. இன்று சோகத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்

ம.தி.சுதா said...

அம்மா என்ற ஒரு சொல் போதும் ஒரு மனிதனை கட்டிப்போட அத்தனை வலிமையான சொல் அது... அதை தட்டிக் கழிப்பவன் ஒரு மனிதனே இல்லை..
அழுத்தமான வரிகளுடன் மனம் கனக்க வைத்திருக்கிறீர்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?

THOPPITHOPPI said...

சில வாழ்க்கையில் கடந்த பின்புதான் உணர்கிறோம்

ஹரிஸ் Harish said...

நன்றி எஸ்,கே..
நன்றி ஜீ..

ஹரிஸ் Harish said...

இன்று சோகத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்//

என்னை மன்னித்துவிடுங்கள் LK..

ஹரிஸ் Harish said...

அம்மா என்ற ஒரு சொல் போதும் ஒரு மனிதனை கட்டிப்போட //

உண்மை தான் மதி சுதா,.நன்றி..

ஹரிஸ் Harish said...

THOPPITHOPPI said...
சில வாழ்க்கையில் கடந்த பின்புதான் உணர்கிறோம்//

:(..ஆமாம்..நன்றி...

Sathish Kumar said...

‘யண்ணே ஒத்த ரூவா குடுணே மிட்டாய் வாங்கிகிறேன்’ என்று கேட்ட மகாராஜா-
பெயரும், அவன் தேவையும் தான் எவ்வளவு நேரெதிர்..
நாம் நமது கவனங்களில் அலட்சியத்தை விதைத்துக்கொண்டிருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று ஹரிஷ்...

ஹரிஸ் Harish said...

பெயரிலாவது மகாராஜாவாக இருக்கட்டுமே என்ற சிறு ஆசைதான்,,வேறென்ன?,,

நன்றி சதீஷ்...

pichaikaaran said...

நெகிழ வைக்கும் பதிவு

வைகை said...

இந்த தொடர் சம்பவத்தை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்கிறோமே எப்படி?சாலை சிறுவர்கள் மீதும் தொழிற்சலையில் உள்ள சிறுவர்கள் மீதும் நாம் அக்கறைகாட்ட மறக்கிறோமே ஏன்?//////

உண்மைதான் ஹரிஸ்!! நம்மில் எத்தனை பேர் அந்த சிறுவர்களை பற்றி கவலைபட்டிருக்கிறோம்!! சிறுவர்கள் பாடு பரவாஇல்லை! அதே சிறுமிகளாய் இருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான்!!

அன்பரசன் said...

உருக்கமான பதிவு ஹரிஸ்.
விடுங்க நம்ம அம்மா தானே. மன்னிச்சுடுவாங்க.

Arun said...

//சிறு கண்டிப்புக்கு அஞ்சி விடுதியிலிருந்து ஓடிவந்தவன் நான். இது நடந்தது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு.ஓட்டமும் நடையுமாயும்,மாட்டுவண்டி,லாரி,ரயில் என்றும் தொடர்ந்த பயணத்தில் ஆரணியிலிருந்து விருதுநகர் வந்து சேர மூன்று நாட்களாகியிருந்தது.// சகா படிச்சா உடனே ரொம்ப கஷ்டமாகிருச்சு. அப்போ உங்களுக்கு எவ்வளவு வயசிருக்கும் ? திரும்ப எப்போ வீட்டுக்கு போனீங்க. இப்போ அம்மா கூடத்தான இருக்கீங்க?

Imran Saheer said...

நல்ல பதிவு நண்பரே, மனம் கனத்து விட்டது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லாம் சினிமா சீரியல் பண்ண வேலை

ஹரிஸ் Harish said...

நன்றி பார்வையாளன்..

ஹரிஸ் Harish said...

சிறுமிகளாய் இருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான்!//

உண்மைதான் வைகை,,,நன்றி..

ஹரிஸ் Harish said...

நன்றி...அன்பரசன்..

ஹரிஸ் Harish said...

@அருண்

அப்ப 12 வயசு சகா..ஆறாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்,,

மூனு நாள்ள திரும்ப வந்துட்டேன்...

ஹரிஸ் Harish said...

நன்றி..myth-buster

ஹரிஸ் Harish said...

எல்லாம் சினிமா சீரியல் பண்ண வேலை//

எத சொல்லுறீங்க போலீஸ்...

Arun said...

நல்ல வேளை. திரும்ப வந்துட்டீங்க. கடவுளுக்கு நன்றி. அந்த குட்டிப்பய்யன் திரும்ப வந்துட்டானா சகா?

ஹரிஸ் Harish said...

ம்..வந்துட்டான் சகா.

//இரண்டு நாளில் மகாராஜா வந்துவிட்டான்//

படிக்கலையாக சகா..

Arun said...

இல்ல சகா நான் நீங்க வீட்ட விட்டு போனத தான் படிச்சுட்டு இருந்தேன். இத கவனிக்கல. பய்யன் வந்துட்டான், நன்று.

ஹரிஸ் Harish said...

ஓகே சகா..நன்றி...

nis said...

:(((

Chitra said...

அன்று நான் ஓடி போனபோதும் என் தாய் இப்படி தானே கதறியிருப்பாள்.அம்மா அன்று உங்களை அதிகம் அழவைத்துவிட்டேனோ.என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா.


......பகிர்ந்து கொள்ள வார்த்தைகளின்றி சோகம் மிஞ்சுகிறது. மீண்டும் தாயை சந்திக்க முயற்சி எதுவும் எடுக்கவில்லையா?

Prabu M said...

ஹரிஸ் .. உண்மையை சொல்லிவிடுகிறேன்...
எனக்கு சோகம் ஏற்படவில்லை....
மனநிறைவு ஏற்பட்டது.... உணர்ந்து மன்னிப்பு கேட்கும் அந்தத் தலைப்பிலேயே உங்கள் நிம்மதி புலப்படுகிறது.... ஓர் உள்ளத்தின் அமைதி வாசகனுக்குத் தரும் உணர்வு மனநிறைவுதானே...

அழகாக அம்மாவுக்கு எப்படியிருந்திருக்கும் என்று உங்கள் உணர்வை அதிக வார்த்தைகளையெல்லாம் போட்டு கணக்கச் செய்யாமல்... கணமான ஒரு பாரத்தை லேசான எழுத்துக்களில் தூவி இறக்கிவைக்கும் வல்லமையைப் பயன்படுத்துங்க... "வெயில்" படத்தின் காட்சியை சரியான இடத்தில் பொருத்தி ஒரு முழுமையைத் தந்துள்ள்து...

Unknown said...

சான்ஸே இல்ல ஹரிஸ்.. எவ்வளவு உணர்வுப்பூர்வமா எழுதியிருக்கீங்க.. கண்டிப்பாக ரொம்பப் பதறித்தான் போயிருப்பாங்க..

வருத்தப்படாதீங்க..

அஸ்மா said...

//அம்மா அன்று உங்களை அதிகம் அழவைத்துவிட்டேனோ.என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா//

வாய்ப்பிருந்தால் இதை உங்க அம்மாவிடம் நேரடியாகவே கேட்டுப் பாருங்களேன், மனசு அவ்வளவு லேசாகிப் போகும்!கவலைப்படாதீங்க.

ஆமினா said...

படிக்கும் போதே மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு ஹரிஸ்!!!

நல்லவேளை திரும்பி வந்து உங்கம்மாவுக்கு சந்தோஷத்த குடுத்தீங்க!!!

ஹரிஸ் Harish said...

நன்றி nis..

ஹரிஸ் Harish said...

நன்றி சித்ராகா..

ஹரிஸ் Harish said...

நன்றி பிரபு..

ஹரிஸ் Harish said...

@பாபு
2அஸ்மா
@ஆமினா

நன்றிகள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மனம் கனக்க வைத்திருக்கிறீர்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல சுடுசோறு நமக்கு கிடைக்காது. பழைய சோறாவது கிடைக்குமா?
அருமையான சமூக அக்கறையுள்ள கட்டுரை. பகிர்வுக்கு நன்றி மாப்ள....

Harini Resh said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஹரிஸ்
அப்படியே என் தம்பி தான் என் கண் முன் வந்தான் :(
இதையே என் தம்பி செய்ததும் நாம் எல்லாம் துடித்து போனதும் :(
பலவருடங்கள் முன் நினைவு வந்தது

துளசி கோபால் said...

அறியாத வயதில் இப்படித்தான் ஏடாகூடமா எதாவது செய்து குடும்பத்தினரைக் காயப்படுத்திடறோம்.

பின்னோக்கிப்போகும் காலயந்திரம் ஒன்னு கிடைச்சால்.....
நாம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நபர்கள் ஏராளம்:(

karthikkumar said...

பங்கு நல்ல பதிவு. என்னவென்று தெரியாமல் அவசரத்தில் முடிவு எடுப்பதன் விளைவுதான் இது.

Unknown said...

மனதை தொட்டுவிட்ட பதிவு நண்பா

☀நான் ஆதவன்☀ said...

:(

துளசி டீச்சர் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்

செல்வா said...

//இதிலிருந்து மாறுபட்டு நிற்பது வசந்தபாலனின் வெயில் மட்டுமே.வீட்டை விட்டு ஓடி போனவரின் வறுமை,இயலாமை,ஏக்கம்,பாசம் ஒவ்வொன்றையும் இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருப்பார்.//

உண்மைதாங்க ., அந்தப் படம் ரொம்ப அருமையா இருக்கும் .. அதிலும் பசுபதியோட நடிப்பு அவரோட அந்த ஏக்கம் கலந்த பார்வை .. சத்தியமா நான் அந்தப் படம் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அழுதுவிடுவேன் ..!!

செல்வா said...

மனசு கனமாகிறது அண்ணா .! எனக்கு வேறு பின்னூட்டம் இடத் தெரியவில்லை .!!

செல்வா said...

//மூனு நாள்ள திரும்ப வந்துட்டேன்..///

அப்பாடா , இத படிச்சதும் தான் நிம்மதியா இருக்கு ..!
ஆனா இதே மாதிரி எத்தனை சிறுவர்கள் , எத்தனை அழுகைகள் ..?
அவர்களின் நிலைமை ..?

ஹரிஸ் Harish said...

நன்றி பிரஷா..

ஹரிஸ் Harish said...

நன்றி ரஹீம் மாமா..

ஹரிஸ் Harish said...

நன்றி ஹரினி..

ஹரிஸ் Harish said...

பின்னோக்கிப்போகும் காலயந்திரம் ஒன்னு கிடைச்சால்.....
நாம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நபர்கள் ஏராளம்://

உண்மை தான் துளசி கோபால்...

ஹரிஸ் Harish said...

@கார்த்திக்குமார்

சரியா சொன்னீங்க பங்கு..நன்றி..

ஹரிஸ் Harish said...

நன்றி

மகாதேவன்..

ஹரிஸ் Harish said...

நன்றி..

ஆதவன்

ஹரிஸ் Harish said...

நன்றி செலவக்குமார்..

எத்தனை சிறுவர்கள் , எத்தனை அழுகைகள் ..?
அவர்களின் நிலைமை ..?//

:(..

Prasanna said...

நல்லபடியா திரும்பி வந்தீங்களே அது போதும் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

நெகிழ வைக்கும் பதிவு ..

தினேஷ்குமார் said...

மனம் கனக்கிறது நண்பரே தாயின் பிரிவு அச்சமயம் பணம் உள்ளவரை ஊர்சுற்றிவிட்டு வீடு திரும்ப கஷ்டப்படுவது.நாம் திரும்பும்வரை உண்ணாமல் உறங்காமல் நோம்பிருப்பால் பாருங்க அன்னை உருகவைத்துவிடும் நம் கண்களில் நீரூற்று அனுபவம் பேசும் உண்மைகள்
அவளின்றி நாமில்லை எங்கும்

Unknown said...

ஹரிஸ் இப்பதான் இந்த பதிவு படித்தேன் மணி சரியாக 2 .30 இன்னும் சாப்பிடவில்லை என் அம்மா என் கைபேசியில் அழைத்து இன்னும் சாப்பிடவில்லையா சீக்கிரம் சாப்பிட வா அதுதான் அம்மா .நானும் எத்தனையோ முறை என் அம்மாவை காய படுத்திருக்கிறேன் ஆனால் மன்னிப்பு கேட்டதில்லை இதோ இப்போது கேட்கசெல்கிறேன்

ஹரிஸ் Harish said...

நன்றி..வெறும்பயன்

ஹரிஸ் Harish said...

நன்றி தினேஷ்குமார்..

ஹரிஸ் Harish said...

நன்றி மணிவண்ணன்..

Anonymous said...

என் வாழ்வின் சில பகுதிகளை நினைவுல வருது சகோ
அருமை

Ramesh said...

அருமையான பதிவு நண்பா... இன்னிக்குதான் தமிழ்மணம் ஓட்டு போடும் போதுதான் இதைப் பார்த்தேன்..

எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியலை...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

அம்மா உயி்ர்எழுத்து! அன்பின் முதல்எழுத்து!
இம்மா நிலமே இணை!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு