****************************************************************************
நாகர்கோவிலில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் தனது வகுப்பாசிரியரை தாக்கியிருக்கிறார்.ஆசிரியர் மாணவர்களை அடிப்பது மாறி இப்பொழுது மாணவர்கள் ஆசிரியரை அடிக்க துவங்கியுள்ளனர்.சம்பவம் நடந்ததற்க்கான காரண காரியங்கள் ஆராயபட வேண்டியது அவசியம். ஆனால் எனது ஆச்சர்யம் ,ஒரு ஆசிரியரை அடிக்கும் அளவிற்க்கு தைரியம் இம்மாணவனுக்கு எங்கிருந்து வந்தது?.ஆசியரின் கண்டிப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதை விடுத்து அவரை கேலி செய்யவும் எதிர்க்கவும் வழிகாட்டியது எது?.நமது தமிழ் சினிமாக்களும் இதற்க்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். ஆசிரியர்களை மொக்கை,அருவை,சருக்குமரம் என்று கேலி செய்வதும் தண்டிக்கும் ஆசிரியரை எதிர்த்து அடிப்பதும் இங்கிருந்து தான் வந்திருக்கும்.
******************************************************************************
கடந்த சில நாட்களாக வலையுலகில் லிவிங் டூ கெதர் புயல் அடித்தது, அடிக்கிறது.என்று கரையை கடக்கும் என்று தெரியவில்லை.நமது மங்குனியார் பாணியில் எனது கருத்தை பின்னர் சொல்லுகிறேன் ல்விங் டூ கெதரை ஆதரிப்பவர்கள் பிளஸ் ஓட்டும் எதிர்ப்பவர்கள் மைனஸ் ஓட்டும் போடுங்கள் என்று பதிவிட்டிருந்தால் தமிழ்மணத்தில் வரலாறு காணாத ஓட்டுக்கள் பதிவாகியிருக்கும்
இருவர் மனமொத்து சேர்ந்து வாழ முடிவெடுத்தபின் அவர்கள் திருமணம் செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன?.திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதால் சமுதாயத்திற்க்கோ பிறருக்கோ எந்த இழப்பும் இல்லை. அதனால் வரும் நன்மை தீமைகள் சம்மத்தபட்டவரையே சாரும். சரியான புரிந்துகொள்ளுதலின் படி இவ்வாழ்க்கையின் சாதக பாதகங்களை அறிந்தே சேர்ந்து வாழ்கிறார்கள்.எதையும் ஏற்க்கும் அல்லது எதிர்கொள்ளும் மனதிடம் அவர்களுக்கு உள்ளது .மற்றபடி திருமணமின்றி சேர்ந்து வாழ்பவர்களை விமர்ச்சிப்பதும் அவர்கள் வாழ்க்கையில், உரிமையில் மூக்கை நுழைப்பதும் முற்றிலும் தவறு..இது ஒரு நிலை..
பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த திருமண முறைகள் இன்று இல்லை. இன்று சாதி மத மறுப்பு திருமணங்களும் காதல் திருமணங்களும் ஏற்றுக்கொள்ளபடுகிறது.விதவை மறுமணமும் விவாகரத்தானோர் மறுமணமும் இயல்பாய் நடக்கிறது.கைபேசியின் உதவியால் திருமணத்திற்க்கு முன்பே இருபாலரும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கின்றனர்.திருமண கட்டுப்பாட்டால் சிறு சிறு ஊடல்கள் நாளடைவில் இணக்கமாக மாற வாய்ப்புகள் அதிகம். திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் அன்பும் புரிந்து கொள்ளுதலும் சுதந்திரமும் அதிகமாகவே இருக்கிறது.இன்னிலையில் திருமணமின்றி சேர்ந்து வாழ்தல் தேவையில்லாத ஒரு தவறான வழிகாட்டல்.இது ஒரு நிலை
அவரவர்க்கு அவரவர் நிலை..திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும் திருமணமின்றி சேர்ந்து வாழ்ந்தாலும் இரு மனங்கள் இணைந்தால் தான் நிலையான வாழ்க்கை
டிஸ்கி: படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்வர்களுக்கு...லிவிங் டூ கெதர் என்று கூகுளில் தேடினால் இந்த படம் தான் வருகிறது..கேள்வியை கூகுளாண்டவனிடம் கேக்கவும்..
கொத்து தொடரும்...
60 comments:
நல்ல கொத்து.
நன்றி பாஸ்..
harish good post man . . .
keep going . .
நன்றி ராஜேஸ்.
நல்ல பதிவு நண்பா
நன்றி மகாதேவன்..
கொத்து super taste :)
நன்றி nis..
உண்மைதான் ஹரிஸ்,
இரு மனங்கள் இணைந்தால் தான் நிலையான வாழ்க்கை.
கொத்து Supper:)
நன்றி ஹரினி...
கொத்து நல்லா வந்துருக்கு. மாணவன் ஆசிரியர் தகவல் புதுசு .. கூடிய சீக்கரம் தமிழ் சினிமா ல வரும்.
//லிவிங் டூ கெதர்//
பாஸ் எப்டி இதெல்லாம், எங்கயோ போய்டீங்க போங்க.
.ஆசியரின் கண்டிப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதை விடுத்து அவரை கேலி செய்யவும் எதிர்க்கவும் வழிகாட்டியது எது?.நமது தமிழ் சினிமாக்களும் இதற்க்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். ஆசிரியர்களை மொக்கை,அருவை,சருக்குமரம் என்று கேலி செய்வதும் தண்டிக்கும் ஆசிரியரை எதிர்த்து அடிப்பதும் இங்கிருந்து தான் வந்திருக்கும்.
...... யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
நல்லாயிருக்கு.. தொடருங்கள்
@அருண்
@தல தளபதி
@சித்ரா
@பலாஜி சரவணன்
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி..
கடந்த சில நாட்களாக வலையுலகில் லிவிங் டூ கெதர் புயல் அடித்தது, அடிக்கிறது.என்று கரையை கடக்கும் என்று தெரியவில்லை.//
Same blood
ஒவ்வொரு கொத்தும் நச்சுன்னு இருக்கு நண்பா. அடிக்கடி இப்படி கொத்திக்கு இருங்கள்.
//தனக்கு உதவி செய்தவன் திருடனாகவோ ரௌடியாகவோ இருந்தாலும் அவனை ஆதர்சன நாயகனாக கொண்டாடுவது சினிமாவில் மட்டுமே இருக்கும் என எண்ணினேன்.நாங்கள் நிஜத்திலும் அப்படித்தான் என காட்டிவிட்டனர் மக்கள்.// :))
//திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும் திருமணமின்றி சேர்ந்து வாழ்ந்தாலும் இரு மனங்கள் இணைந்தால் தான் நிலையான வாழ்க்கை//
சூப்பரப்பு! :))
இந்த பதிவுக்கு அசைவ கொத்துன்னு ஏன் பேர் வெச்சாரு? டவுட்?
//Same blood//
நன்றி..
@ரஹீம் கஸாலி
@ஜீ
நன்றி..
@Arun Prasath
நீங்க இந்தமாதிரி கேள்வி கேக்கனுமுனு தான்..
அவரவர்க்கு அவரவர் நிலை..திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும் திருமணமின்றி சேர்ந்து வாழ்ந்தாலும் இரு மனங்கள் இணைந்தால் தான் நிலையான வாழ்க்கை
அருமையான கருத்துக்கள் .ஹரிஸ் பிரிக்கிறீங்க கொத்து தொடரட்டும்
நன்றி மணிவண்ணன்..தொடரும்..
//நீங்க இந்தமாதிரி கேள்வி கேக்கனுமுனு தான்..//
பதில் சொல்லு பா
தெரிஞ்சா சொல்லுவோம்ல...
சும்மா..பல விசயங்கள கொத்தலாம்னு தான்..
///நாகர்கோவிலில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் தனது வகுப்பாசிரியரை தாக்கியிருக்கிறார்.ஆசிரியர் மாணவர்களை அடிப்பது மாறி இப்பொழுது மாணவர்கள் ஆசிரியரை அடிக்க துவங்கியுள்ளனர்//////
நான் பள்ளியில் படித்தபோது தலைமை ஆசிரியரையே ஒரு மாணவன் அடித்தான் ஆனால் அதுவே பெரிதாக பேசப்பட வில்லை/ தண்டிக்கவில்லை.
கடந்த சில நாட்களாக வலையுலகில் லிவிங் டூ கெதர் புயல் அடித்தது, அடிக்கிறது.என்று கரையை கடக்கும் என்று தெரியவில்லை.நமது////
சில நாட்கள் இல்லை சில வாரம்....
@தொப்பி தொப்பி
அப்பவே ஆரம்பிச்சிட்டிங்களா?ரைட்டு..
சில நாட்கள் இல்லை சில வாரம்....//
ரைட்டு...
கொத்து சூப்பர்
u continue bangu
@கார்த்திக்குமார்
நன்றி பங்கு..தொடர்ந்திருவோம்..
கொத்து நல்லா தான் இருக்கு
கொத்து சூப்பர்.. தொடருங்கள்..
//திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும் திருமணமின்றி சேர்ந்து வாழ்ந்தாலும் இரு மனங்கள் இணைந்தால் தான் நிலையான வாழ்க்கை//
சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ஹரிஸ்.மனங்களை பொருத்தே வாழ்க்கை அமையும்.
கொத்து சூப்பர்
கொத்து உப்பு கம்மி காரம் தூக்கல் ...
தொகுப்பு சிறப்பு!
சூப்பரா இருக்குய்யா வாழ்த்துக்கள்
அருமையான சொற்கள்
நச்சுன்னு இருக்கு
//நாகர்கோவிலில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் தனது வகுப்பாசிரியரை தாக்கியிருக்கிறார்.ஆசிரியர் மாணவர்களை அடிப்பது மாறி இப்பொழுது மாணவர்கள் ஆசிரியரை அடிக்க துவங்கியுள்ளனர்.சம்பவம் நடந்ததற்க்கான காரண காரியங்கள் ஆராயபட வேண்டியது அவசியம். ஆனால் எனது ஆச்சர்யம் ,ஒரு ஆசிரியரை அடிக்கும் அளவிற்க்கு தைரியம் இம்மாணவனுக்கு எங்கிருந்து வந்தது?.ஆசியரின் கண்டிப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதை விடுத்து அவரை கேலி செய்யவும் எதிர்க்கவும் வழிகாட்டியது எது?.நமது தமிழ் சினிமாக்களும் இதற்க்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். ஆசிரியர்களை மொக்கை,அருவை,சருக்குமரம் என்று கேலி செய்வதும் தண்டிக்கும் ஆசிரியரை எதிர்த்து அடிப்பதும் இங்கிருந்து தான் வந்திருக்கும்//
சரிதான் நண்பா...
தைரியமான மாணவர் இல்லை..திமிரெடுத்த மாணவராய் இருப்பான்.. லிவிங் டூ கெதர் இரு குடும்பங்களை முதலில் பாதிக்கும், பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும்.
நன்றி இந்திரா
நன்றி பாபு..
நன்றி திலீப்.
@farhan
அடுத்த கொத்துல கொஞ்சம் உப்பும் போட்டுருவோம்..
@எஸ்.கே
@ஆர்.கே.சதீஷ்குமார்
@சாமக்கோடங்கி
நன்றி..
@அமுதா கிருஷ்ணன்
கட்டுப்பாடில்லாத தைரியம் தான் திமிர்.
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி,,
லிவிங் டுகேதரை தவிர்த்து மத்தது எல்லாம் அருமை
//லிவிங் டூ கெதர் இரு குடும்பங்களை முதலில் பாதிக்கும், பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும். //
+100000000
நன்றி,
வாழ்வோம், வாழ வைப்போம்.
நடத்துங்க...............
@lk
+1000000001
@விக்கி
நன்றி..
parattugal nanbare nalla aakkam
nalla vazhi nadaththal gal
polurdhayanithi
//எல்லோரையும் மதிக்க நினைப்பவன்...சில நேரங்களில் சிலரை மிதிக்கவும் நினைப்பேன்...//
அரசியல்வாதிகள்,ஆசிரியர்கள்,போதகர்கள்,சாமியார்கள் இப்படி நீளும் பட்டியலில் நல்லவர்களும்,கெட்டவர்களும் உள்ளனர். அவர்களுடைய செயல்பாட்டிற்க்கு தகுந்தமாதிரி சமுதாயம் மதிக்கவோ,மிதிக்கவோ செய்கிறது.அது சமுதாயத்தின் குறையல்ல.
ரைட்டு சார்..
//தனக்கு உதவி செய்தவன் திருடனாகவோ ரௌடியாகவோ இருந்தாலும் அவனை ஆதர்சன நாயகனாக கொண்டாடுவது சினிமாவில் மட்டுமே இருக்கும் என எண்ணினேன்.நாங்கள் நிஜத்திலும் அப்படித்தான் என காட்டிவிட்டனர் மக்கள்.//ஏங்க நீங்க ஒன்னு, இவரைப் போயி எவன் மாலை போட்டு வரவேற்ப்பான்? எல்லாம் கழகக் கண்மணிகளா இருக்கும். கள்ள ஓட்டு போடுதல், ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றுதல், ஓட்டுக்குப் பணம் பட்டுவாடா என்று வெவ்வேறு துறைகள் கொண்ட கட்சி இது. இந்த மாதிரி திருடிவிட்டு மாட்டிக் கொண்டு மானம் போய் வருபவர்களையும், வரவேற்க அடியாட்கள் இருக்க மாட்டார்களா? "கலகக்" கண்மணிகளாயிற்றே? ரஞ்சிதா கிட்ட மாட்டிகிட்ட சாமியார் இப்பவும் நான் நிரபராதிதான்னு வாதாட வில்லையா? அதே மாதிரி இந்த நாதாரிகளும் கடைசி வரை நிரபராதிதான்னு சொல்லிகிட்டே இருக்கும். நிரூபிச்சாலும், தலித்துக்கு எதிரான பார்ப்பன சதின்னு சொல்லும், ஆனா மக்கள் பணம் ஒன்னே முக்கால் லட்சம் கோடி நரி தின்று விட்ட கோழிதானே, மீண்டும் கூவவா போகிறது?
//ஆசிரியர் மாணவர்களை அடிப்பது மாறி இப்பொழுது மாணவர்கள் ஆசிரியரை அடிக்க துவங்கியுள்ளனர்.// மாணவர்களை தண்டிப்பது கிரிமினல் குற்றம் என்ற சட்டம் போட்டு, மாணவர்களை சல்லிப் பயல்கலாக மாற்றும் மஞ்சள் துண்டுவின் திட்டம்தான் இதற்க்குக் காரணம். அடியாத மாடு பணியாது. பெற்றோர்களே கூட பிள்ளைகளை செம்மையாக கவனித்தால் தான் வழிக்கே வருவார்கள். இது நாம் எல்லோரும் கண்கூடாகக் காண்பது. அப்படி இருக்கும் போது ஆசிரியர்கள் எதுவுமே செய்யக் கூடாது என்றால் எப்படி? இப்போது மாணவர்கள், வீட்டுப் பாடம் செய்யச் சொல்லி கண்டிக்கும் ஆசிரியர்களைப் பார்த்து, "நீ என்னை அடித்தாய் என்று போலீசில் புகார் செய்வேன்" என்று மிரட்டும் நிலை உள்ளது. ஆசிரியர், "எனக்கேன் வம்பு நீ படிப்பதும் படிக்காததும் உன் தலை எழுத்து" என்று விட்டு விடுவார். இந்த மாணவ சமுதாயம் உருப்படவா போகிறது? உருப்படக் கூடாது என்பதுதானே மஞ்சள் துண்டுவின் நோக்கம். வருங்காலத்தில் சாரயக் கடையில் வேலை செய்யத்தான் அவன் போக வேண்டும். ஹிந்தி படிக்கக் கூடாது என்று நம் சமுதாயத்தை உருப்படாமல் செய்த மஞ்சள் துண்டுவின் இன்னொரு சேவை இது. அவனும் அவன் கட்சியும் இருக்கும் வரை தமிழம் உருப்படாது.
//இருவர் மனமொத்து சேர்ந்து வாழ முடிவெடுத்தபின் அவர்கள் திருமணம் செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன?.திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதால் சமுதாயத்திற்க்கோ பிறருக்கோ எந்த இழப்பும் இல்லை. //இதன் விளைவு இப்போது தெரியாது. பக்கத்து வீடு பற்றி எறிந்தால் என்ன, நாம் அவர்கள் சுதந்திரத்தில் தலையிட முடியாது என்று சும்மா இருக்க முடியுமா? இந்த வழக்கம் தொத்து வியாதி போல சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் பரவும். நாளை உங்கள் மகளே [ஒரு வேலை அப்படி ஒருத்தர் இருந்தால்] இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது வாழ்கிறேன், என்றால் நீங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வீர்களா? ஆனால் அதுதான் நடக்கும். இது ஒரு தப்பே இல்லை என்ற நிலை வரும் போது உங்களால் தடுக்கவே முடியாது. உள்ளுக்குள்ளேயே அழ வேண்டியிருக்கும், பரவாயில்லையா?
Post a Comment