சிலருக்கு அவர்களின் மீசையே அவர்களுக்கு அடையாளம்.. ஹிட்லர்,சாப்ளின்,பாரதியார் முதல்...வீரப்பன்,ஜாங்கிட்..வரை பலருக்கும் மீசை அவர்களின் அடையாளம்..நம்ம ஊரில் கூட மீசை ராஜா.மீசை முருகேசன் என்று சிலரை அவர்களின் மீசையை அடையாளபடுத்தி கூப்பிடுவதுண்டு..
மனிதன் முதன்முதலாக எப்போது மீசை வைத்துக்கொண்டான் என்று சரியாக தெரியவில்லை..ஆனால் விக்கி தகவல் படி கி.மு 300 ல் வரையப்பட்ட மீசையுடன் உள்ள குதிரைவீரன் ஓவியம், மனிதன் 2300 ஆண்டுகளுக்கு முன்பே மீசை வைத்திருந்தான் என்பதை அறிய தருகிறது.. கத்திரி, பிளேடு, ரேசர் இல்லாம, எப்படி நீட்டா ஷேவ் பண்ணி மீசை வைத்திருப்பார்கள்? என்பது ஆச்சர்யத்துக்கு உரிய கேள்வி..நவீன கருவிகள் இருக்கும்போதே பிளேடு போட்டு முகத்தை ரத்தகளறி ஆக்கிவிடும் போது, கரடுமுரடான கருவிகளைகொண்டு அவர்கள் எப்படி ஷேவ் பண்ணியிருப்பார்கள்?......நினைக்கும் போதே இரத்தவாடை அடிக்கிறது..சரி அத டீல்ல விடுவோம்...
பதின்ம வயதில் இந்த மீசை எல்லோருக்கும் கம்பீரமாகவோ, அவமானமாகவோ சில அனுபவங்களை விட்டுசெல்கிறது....இவ்வயதில் எல்லோருக்கும் மீசை வைக்க ஆசை இருக்கும் (ஆனா பலருக்கு வராது).. ஆழகாக, நேர்த்தியாக மீசை வைத்திருப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும்..மீசை வராத நண்பர்களை மொழுக்குசாமி, ஒம்போது, சின்னபையன், இப்படி பட்டப்பெயர் வைத்து கேலி செய்வதும் நடக்கும்..
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு கட்டாய மீசை வளிப்பு சட்டம் இருந்ததாம் (நாம படிக்கும் போது ஏன் இல்லைனு தெரியல)
மீசையை வைத்து ஓவரா சீன் போடும் வெட்டிபந்தாக்களுக்கு, நாலுபேர் சேந்து மீசைய எடுத்துவிட்ட அனுபவமும் சிலருக்கு இருக்கலாம்..நமக்கு அப்படி ஒரு அனுபவம் இருக்கு, நைட்டு அலாரம் வச்சி..விளக்கு புடிச்சி ஒரு நண்பனுக்கு மீசைய எடுத்து விட்டோம்..(மறுநாள் நான் வாங்கிய வார்த்தைகளை தட்டச்சு செய்ய கூசுகிறது...)
சில ஆண்டுகளுக்கு முன்புவரை சினிமா நச்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்கள் மீசையுடன் தான் இருந்தனர், ஆனால் தற்காலத்தில் யாரும் மீசை வைத்துக்கொள்வதில்லை.(கத்தை மீசை வச்சிருந்த விஜய்யே டிரிம் பண்ணிட்டாரு).
23 comments:
// மீசை இல்லாத ஆண்களையே பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்-ஏ.சி.நில்சன் ஆய்வு முடிவு.//
சொட்டை விழுந்த ஆண்களையே பெரிதும் விரும்புகின்றார்கள் - ஏதோ ஒரு ஆய்வு முடிவு.
நீங்கள் எப்பொழுது சொட்டையாகப் போகின்றீர்?
இன்னும் ஒரு பத்து வருஷத்துல ஆயிருவேன் பாஸ்..
@கும்மி
//சொட்டை விழுந்த ஆண்களையே பெரிதும் விரும்புகின்றார்கள்//
அப்ப உங்கள நிறைய பேர் பெரிதும் விரும்புவாங்களே பாஸ்..
//அப்ப உங்கள நிறைய பேர் பெரிதும் விரும்புவாங்களே பாஸ்..//
யோவ் எனக்கு சொட்டைஎல்லாம் கிடையாது.
என்ன கொஞ்சம் ஏறு நெத்தி. அது நாடு மண்டை வரைக்கும் வந்திருச்சி.
@கும்மி
கொஞ்சமில்ல பாஸ் ரொம்ப ஏறிடுச்சி...நமக்கு அப்படி தான் ஏறும் போல...ஏறும் போது அதுக்கு ஓரு பதிவு போடுவோம்..
//.ஏறும் போது அதுக்கு ஓரு பதிவு போடுவோம்.. //
எப்படியெல்லாம் பதிவு தேத்துராங்கப்பா?
உங்க அளவுக்கு நமக்கு யோசிக்க முடியாது பாஸ்...இப்படி தான் தேத்தவேண்டி இருக்கு..
//உங்க அளவுக்கு நமக்கு யோசிக்க முடியாது பாஸ்...இப்படி தான் தேத்தவேண்டி இருக்கு.. //
நீங்க வேற. நான் இதுவரைக்குமே நாலு பதிவுதான் எழுதியிருக்கேன்.
நீங்க போடுற பின்னூட்டத்த வச்சி ஒரு நூறு பதிவு தேத்தலாம் பாஸ்..
//நீங்க போடுற பின்னூட்டத்த வச்சி ஒரு நூறு பதிவு தேத்தலாம் பாஸ்..
//
பின்னூட்டம் போடுறதுக்காகதான் கும்மி அப்படின்னு பேரே வச்சேன். ஆனா, இப்ப பின்னூட்டம் போடக்கூட நேரம் இல்லை. அவ்வ்வ்வவ்வ்வ்
வால்பையன் பதிவுல கல்வெட்டோட லிங்க் கொடுத்துருந்தீங்கள சூப்பர் பாஸ்..இந்த மாதிரி உருப்படியான பதிவு இருந்தா நமக்கும் கொஞ்சம் பரிந்துரைங்க பாஸ்..
உங்க மெயில் ஐடி கொடுங்க. ஷேர் பண்ணுறேன்
உங்களுடைய ஐடி பொதுவில் இருக்கவேண்டாம் எனில், முந்தைய கமெண்டை டெலிட் செய்துவிடுங்கள்.,
ஒகே பாஸ்..டெலீட் பண்ணீட்டேன்..அப்படியே நமக்கு ஒரு மெயில் போடுங்க..
meesai illathathai maraikka ennellaam solla vendierukku. silarukku meesai vaithal nalla irrukkum,silarukku meesai edutha nalla irukkum.aanaal palarukko valarnthaal thaane edukka!
@விஜயன்
ஒத்துக்குறேன்..உங்களுக்கு பெரிய மீசை தான்..
//aanaal palarukko valarnthaal thaane edukka!//
அந்த பலர்ல நான் இல்லைல..
/மீசை இல்லாத ஆண்களையே பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்-ஏ.சி.நில்சன் ஆய்வு முடிவு//
எந்த நாட்டில் ???
hahaha
interesting and funny comments
@lk
நம்ம நாட்டில தான் சார்..
@nis said...
thank you..thank you...
மீசைய வச்சி தமிழ்ல ஒரு முழு காமடி படமே வந்திருக்கு பாஸ் அதையும் சேத்துடுங்க - தில்லுமுல்லு.
அதுல கடைசி சீன்ல மீசைய பத்தி தேங்கா சீனிவசன் ஒரு கமண்ட் குடுப்பார் சூப்பரா இருக்கும்.. ஆனா பாருங்க இப்ப மறந்துடுச்சு.
சுவாரசியமான பதிவு தல வாழ்த்துக்கள்
@சர்ஹூன்
ஹா..ஹா..ஹா..
நன்றி நண்பா..
Post a Comment