மீசை ஆண்களின் அடையாளம்..
மீசை கம்பீரத்தின் அடையாளம்..
மீசை வீரத்தின் அடையாளம். (அப்படில்லாம் சொல்லிக்கிறாங்க)
சிலருக்கு அவர்களின் மீசையே அவர்களுக்கு அடையாளம்.. ஹிட்லர்,சாப்ளின்,பாரதியார் முதல்...வீரப்பன்,ஜாங்கிட்..வரை பலருக்கும் மீசை அவர்களின் அடையாளம்..நம்ம ஊரில் கூட மீசை ராஜா.மீசை முருகேசன் என்று சிலரை அவர்களின் மீசையை அடையாளபடுத்தி கூப்பிடுவதுண்டு..
குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலைனு பழமொழி பேசும்போது மீசை மானத்துக்கும் அடையாளமா வருது (அப்ப மீசை இல்லாதவன்லாம் மானம்கெட்டவனா?...அதான?)
மனிதன் முதன்முதலாக எப்போது மீசை வைத்துக்கொண்டான் என்று சரியாக தெரியவில்லை..ஆனால் விக்கி தகவல் படி கி.மு 300 ல் வரையப்பட்ட மீசையுடன் உள்ள குதிரைவீரன் ஓவியம், மனிதன் 2300 ஆண்டுகளுக்கு முன்பே மீசை வைத்திருந்தான் என்பதை அறிய தருகிறது.. கத்திரி, பிளேடு, ரேசர் இல்லாம, எப்படி நீட்டா ஷேவ் பண்ணி மீசை வைத்திருப்பார்கள்? என்பது ஆச்சர்யத்துக்கு உரிய கேள்வி..நவீன கருவிகள் இருக்கும்போதே பிளேடு போட்டு முகத்தை ரத்தகளறி ஆக்கிவிடும் போது, கரடுமுரடான கருவிகளைகொண்டு அவர்கள் எப்படி ஷேவ் பண்ணியிருப்பார்கள்?......நினைக்கும் போதே இரத்தவாடை அடிக்கிறது..சரி அத டீல்ல விடுவோம்...
பதின்ம வயதில் இந்த மீசை எல்லோருக்கும் கம்பீரமாகவோ, அவமானமாகவோ சில அனுபவங்களை விட்டுசெல்கிறது....இவ்வயதில் எல்லோருக்கும் மீசை வைக்க ஆசை இருக்கும் (ஆனா பலருக்கு வராது).. ஆழகாக, நேர்த்தியாக மீசை வைத்திருப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும்..மீசை வராத நண்பர்களை மொழுக்குசாமி, ஒம்போது, சின்னபையன், இப்படி பட்டப்பெயர் வைத்து கேலி செய்வதும் நடக்கும்..
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு கட்டாய மீசை வளிப்பு சட்டம் இருந்ததாம் (நாம படிக்கும் போது ஏன் இல்லைனு தெரியல)
மீசையை வைத்து ஓவரா சீன் போடும் வெட்டிபந்தாக்களுக்கு, நாலுபேர் சேந்து மீசைய எடுத்துவிட்ட அனுபவமும் சிலருக்கு இருக்கலாம்..நமக்கு அப்படி ஒரு அனுபவம் இருக்கு, நைட்டு அலாரம் வச்சி..விளக்கு புடிச்சி ஒரு நண்பனுக்கு மீசைய எடுத்து விட்டோம்..(மறுநாள் நான் வாங்கிய வார்த்தைகளை தட்டச்சு செய்ய கூசுகிறது...)
சில ஆண்டுகளுக்கு முன்புவரை சினிமா நச்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்கள் மீசையுடன் தான் இருந்தனர், ஆனால் தற்காலத்தில் யாரும் மீசை வைத்துக்கொள்வதில்லை.(கத்தை மீசை வச்சிருந்த விஜய்யே டிரிம் பண்ணிட்டாரு).
சிலர் காதலிக்கு (இல்லைனா) மனைவிக்கு முத்தம் குடுக்கும்போது குத்துமேனு மீசைய எடுத்திருக்கலாம்..சிலர் குழந்தய கொஞ்சும்போது மீசை குத்தி குழந்தைய்க்கு வலிக்குமேனு மீசைய எடுத்திருக்கலாம் (இந்தியன் தாத்தா மாதிரி)..சிலர் ஸ்டைலா இருக்குமேனு எடுத்திருக்கலாம்..
டேய்....உனக்கு என்னதாண்டா ஆச்சி? ஏன் இப்படி மீசை.,மீசைனு புலம்பிக்கிட்டு இருக்கனு கேக்குறீங்களா?..
நான் நேத்து மீசைய எடுத்துட்டேன்...
குறிப்பு: மீசை இல்லாத ஆண்களையே பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்-ஏ.சி.நில்சன் ஆய்வு முடிவு.