Friday, December 10, 2010

விருதகிரி - திரைவிமர்சனம்..

ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி பல அரசியல் வாதிகளின் கொள்ளைகளை தட்டி கேட்டதால் பதவியை இழக்கிறார்.பதவி இழந்த அதிகாரி சுழன்றடிக்கும் காற்றில் தீக்கண்களுடன் அரசியல் வாதிகளின் முன் ’நானும் உங்களை மாதிரி அரசியலில் களமிறங்கி வென்று காட்டுகிறேன் என்று சவால்விடுகிறார்’’.
                                                            

தான் கொண்ட கொளகையில் உறுதியாக இருந்து விடுத்த சவாலை எப்படி நிறைவேற்றினார் என்பது படத்தின் மீதி கதை.

போலீஸ் அதிகாரியாகவும்.அரசியல்வாதியாகவும் நடிப்பில் பளிச்சிடுகிறார் கேப்டன்.உலகின் அனைத்து கலைகளும் இவனுக்கு தெரியும் என்று காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார் கேப்டன்.

படத்தின் மிகப்பெரிய பலம் இசை.பாடல் காட்சிகளில் ரசிகைகளின் மனதை கொள்ளை கொள்கிறார் கேப்டன்.
                                        

இயக்குனராக கலக்கியிருக்கிறார் கேப்டன்.ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார்.ஜேம்ஸ் கேமரூனுக்கே பாடம் நடத்தியிருக்கிறார் கேப்டன்.

ஸ்டண்ட் காட்சிகளை பற்றி நான் எவ்வளவு சொன்னாலும்.அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரிதான்.கிராபிக்ஸில் கூட பண்ணமுடியாத சண்டைகளை வெகு இயல்பாக ஆக்ரோசமாக செய்கிறார்.கேப்டன்..
                                          

படத்தில் எனக்கு பிடித்த வசனம் ’நான் ஆட்சிக்கு வந்தால் மக்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்’ .இந்த ஒரு டையலாக்கை வைத்துதான் ஓவர் நைட்டில் ஒபமா ஆகிறார் கேப்டன்.

எதிர்பார்க்கபடும்
குமுதம் ரேங்கிங் - மிக மிக நன்று.
ஆனந்த விகடன் மார்க் - 98/100

விருதகிரி: பெப்பர் போட்டு வறுத்தகறி.

டிஸ்கி 1:இந்த விமர்சனத்தை எழுதியவர் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதுவோர் சங்க தலைவர் மாப்ள ஹரிஸ்..

டிஸ்கி 2:படத்தை பார்க்க பதிவர்களை அழைத்து சென்ற கேப்டனின் கொள்கைபரப்பு செயலாளர் சிரிப்பு போலீஸ் ரமேஸ் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.அவர யாராவது பாத்தீங்கன்ன கொஞ்ச நாள் கடைய மூடிட்டு தலைமறைவா இருக்க சொல்லுங்க சாமிகளா...

Saturday, December 4, 2010

நீங்க அரசியல் தலைவராகனுமா?..இதோ சில டிப்ஸ்..

*முதல் முக்கிய தகுதி..ஈனம்,மானம், ரோஷம்,சூடு,சுரணை எல்லாத்தையும் வீட்டுக்குள்ள மட்டும் வச்சிக்கனும். பொதுவில யாரும் காரிதுப்புனாலும் ஹிஹிஹி னு சிரிச்சிக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்..

*காலையில பல்லுவிலக்குனதுல இருந்து நைட்டு உச்சா போனது வரை உங்கள பத்தி ஏதாவது ஒரு நியூஸ் பப்ளீஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

*பாத்ரூமா இருந்தாலும் பஜராஇருந்தாலும் எப்பவும் பின்னாடியே வர்ரதுக்கு நாலு அல்லக்கைகள் கண்டிப்பா இருக்கனும்.

*காது குத்துல இருந்து கருமாதிவரை எந்த பங்ஷனா இருந்தாலும்.பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்ல செல்போன்ல பேசிகிட்டே இருக்கணும்.பல பல போஸ் குடுக்கனும் இதோ ஒரு சேம்பல்..

                                          

*அடிக்கடி பிறந்தநாள் விழா நடத்தி ஏழைகளுக்கு அன்னதானமும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகமும் வழங்கிட்டே இருக்கணும்.

*ஊர்வலம் போகும் போது சைட்ல நிக்கிரவங்க கைல குழந்தவச்சிருந்தா வாங்கி கொஞ்சனும்.கிளவிக இருந்தா கட்டிபிடிச்சி உம்மா கொடுக்கனும்.

*குருபூஜைனா எந்த சாதியா இருந்தாலும்,திருவிழானா எந்த மதமா இருந்தாலும் படை பரிவாரங்களோட தவறாம ஆஜர் ஆகிடனும்..

*பொதுகூட்டங்கல்ல என் இனமக்களேனும், ஊருக்கு ஓரமா பெரிய கல்யாணமண்டபத்துல கூட்டம் போட்டா என் சாதிமக்களேனும் இடமறிந்து பேசனும்.

*மைக் பிடிச்சா நாலு வார்த்தைக்கு ஒரு தடவை தமிழ்,தமிழர்,ஏழைகள்,சிறுபான்மையினர்னு பேசனும்..(ஐயையோ இதுவே நாலு வார்த்த வந்துருச்சா)

*தமிழ்நாட்டுல அரசியல் தலைவராகனும்னா கண்டிப்பாக தமிழனா இருக்ககூடாது.

*அடிதடி,கொலை,கொள்ளை,கற்பழிப்புனு ஏதாவது ஒரு வழக்குல கைதாகி ஜாமீன்ல வந்துருக்கணும்.

*அன்பார்ந்த,என் உயிரினும் மேலான,என் நெஞ்சிற்கினியனு ஆரம்பிச்சி யாருக்கும் புரியாத பாஷைல அரைமணிநேரம் பேசதெரியணும்.

*திரைதுறையில் நடிகர்,கதாசிரியர்,கவிஞர்,தயாரிப்பாளர்,வினியோகஸ்தர்னு ஏதாவது ஒண்ணுலயாவது தொடர்பு இருக்கணும்.

*காலையில 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிவரை காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்க தெரியனும்.

*ஏதாவது ஒரு பல்கலைகழகத்துல இருந்து டாக்டர் பட்டம் (துட்டு கொடுத்தாவது) வாங்கியிருக்கணும்.

*இது எல்லாத்தையும் விட மிகமுக்கிய தகுதி..பெரும் பணக்காரனா இருக்கணும்...

டிஸ்கி 1: இந்த தகுதிகள் எல்லாம் உங்ககிட்ட இருந்துச்சினா நீங்க பிளாக்க மூடிட்டு அரசியல் தலைவரா போய் மக்கள கொல்லலாம்.இல்லைனா தொடர்ந்து மொக்கை போட்டு பிளாக்க படிக்கிறவங்கள கொல்லலாம்.

டிஸ்கி2:இன்னும் ஏதாவது சிறப்பு தகுதிகள் இருந்தா பின்னூட்டத்துல தெரியபடுத்துங்க மக்களே.எப்படியாவது நாம ஒரு அரசியல் தலைவரையாவது
உருவாக்கி ஆகனும்..

Friday, December 3, 2010

என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா..

வீட்டை விட்டு ஓடும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.எது இவர்களை இவ்வாறு ஓடச்செய்கிறது?.இப்படி ஓடிவருபவர்களில் எத்தனை பேர் வாழ்வில் நின்று வென்றிருக்கிறார்கள்?

வீட்டைவிட்டு ஓடி வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆசிரியர் கண்டிப்பு,படிப்பில் வெறுப்பு,வீட்டில் கண்டிப்பு, வறுமை என ஓராயிரம் கதைகள் இருக்கும்.

பெருநகருக்கு ஓடிவரும் அவர்கள், கையிலிருக்கும் காசு கரையும் வரை இதுவல்லவோ வாழ்க்கை என்று சுற்றிதிரிகின்றனர்.பின்னர் தான் இது வேறு உலகம் என்பதை புரிந்து கொள்கின்றனர். அவர்களின் ஆசைகள் வெகுவிரைவில் நிராசை ஆகிவிடுகின்றன.பெருநகரம் தன் இருண்ட பக்கத்தை அவர்களுக்கு காட்டத்தொடங்குகின்றது.வறுமையும் நெருக்கடியும் அவர்களை துரத்த துவங்குகிறது.உயிர் வளர்க்க ஏதோ ஒரு உணவகத்திலோ கடையிலோ வேலைக்கு சேர்கின்றனர்.பெருநகரத்தின் இயந்திரவாழ்க்கையில் அவர்களும் ஓர் இயந்திரமாய் இணைந்து போகிறார்கள்.

இந்த தொடர் சம்பவத்தை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்கிறோமே எப்படி?சாலை சிறுவர்கள் மீதும் தொழிற்சலையில் உள்ள சிறுவர்கள் மீதும் நாம் அக்கறைகாட்ட மறக்கிறோமே ஏன்?

வீட்டை விட்டு நகரத்திற்க்கு ஓடி வருபவர்கள், பின்னர் பெரும் செல்வந்தர்கள் ஆவது போன்றும், குற்றப்பிண்ணனியில் சுகமாய் இருப்பது போன்றும் சித்தரிக்கப்படும் திரைப்படங்கள் சிறுவர்களுக்கு வழிகாட்டி செல்கின்றன.எனக்கு தெரிந்து இதிலிருந்து மாறுபட்டு நிற்பது வசந்தபாலனின் வெயில் மட்டுமே.வீட்டை விட்டு ஓடி போனவரின் வறுமை,இயலாமை,ஏக்கம்,பாசம் ஒவ்வொன்றையும் இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருப்பார்.
                                          

சிறு கண்டிப்புக்கு அஞ்சி விடுதியிலிருந்து ஓடிவந்தவன் நான். இது நடந்தது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு.ஓட்டமும் நடையுமாயும்,மாட்டுவண்டி,லாரி,ரயில் என்றும் தொடர்ந்த பயணத்தில் ஆரணியிலிருந்து விருதுநகர் வந்து சேர மூன்று நாட்களாகியிருந்தது.

‘யண்ணே ஒத்த ரூவா குடுணே மிட்டாய் வாங்கிகிறேன்’ என்று எப்போதும் சிரித்தமுகத்துடன் என்னை சுற்றிவரும் மகாராஜா சென்றவாரம் ஒரு நாள் வீட்டைவிட்டு ஓடிப்போனான்.அவன் தாய் அவனுக்கு மிட்டாய் வாங்க காசு கொடுக்கவில்லையாம்.அன்று இரவு அந்த தாய் பெருங்குரலெடுத்து கதறியது என் இதயத்தில் ரணமாய் பதிந்து போனது.இரண்டு நாளில் மகாராஜா வந்துவிட்டான்.ஆனால் அந்த இரவும் அந்த தாயின் கதறலும் என் மனக்கண் முன் வந்துகொண்டே இருக்கிறது.

நான் பின்னோக்கி செல்கிறேன்.அன்று நான் ஓடி போனபோதும் என் தாய் இப்படி தானே கதறியிருப்பாள்.அம்மா அன்று உங்களை அதிகம் அழவைத்துவிட்டேனோ.என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா.

Wednesday, December 1, 2010

அசைவ கொத்து 03

                                                
தினமும் கூச்சல் அமளி ஒத்திவைப்புனு பாராளுமன்றம் முடங்கி போய் கிடக்கு. தலைவர் ரித்திஸ் பாராளுமன்றத்துல பேசுவது போன்ற ஒரு புகைப்படத்தையாவது பாக்கனும்கிற என் ஆசை இந்த முறையும் நிராசை ஆகிவிடும் போல (ஒரு பேனர் அடிக்கலாம்னு தான்).இப்படியே ஒத்தி வச்சிகிட்டே போனா 2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தைவிட, பாராளுமன்றம் நடைபெறாமல் வெட்டியாக செலவாகும் பணம் அதிகமாக போனாலும் போகலாம்
******************************************************************************
ஆந்திர அரசியல்ல காங்கிரஸோட கோஷ்டி, குடிமிபிடி, பதவி சண்டைலாம் சூப்பரா போய்கிட்டு இருக்கு.கிரண்குமார் ரெட்டியும் அன்னை சோனியாஜியும் ஆளையும் டம்மி ஆக்கி ஆட்சியையும் தக்க வச்சிக்கிற கேம் சூப்பரா விளையாடுறாங்க.சிரஞ்சீவிகாரோட கூட்டணி போட்டு எப்படியும் ஆட்சிய காப்பாத்திருவாங்க.ஆனா இதே மாதிரி ஒரு நிலமை தமிழ்நாட்டுல வந்து நம்ம கேப்டன் கையில ஒரு இருபது எம்.எம்.ஏ இருந்துருந்தா, துணை முதலமைச்சர் பதவி. அனைவருக்கும் அமைச்சர் பதவினு ஜமாய்ச்சிருப்பாரு.
******************************************************************************
நடிகர் விஜயகுமாருக்கும் அவர் பொண்ணு வனிதாவுக்கும் என்ன பிரச்சனைனு சரியா தெரியல.அவங்க மாறி மாறி குடுக்குற பேட்டிகளையும் அறிக்கைகளையும் பார்த்த ச்சீ..சீ.... எப்படியோ நக்கீரனுக்கு இன்னும் ஒரு ரெண்டு மூனு வாரத்துக்கு கவர் ஸ்டோரி பஞ்சமில்ல.
******************************************************************************
நம்ம பா.ம.க தலைவர் அண்ணன் கோ.கா.மணி கூட்டணிக்கு இன்னும் காலம் கனியலனு சொல்லிருக்காரு.இதுக்கு எதுக்கு காய் கனினு(டபுள் மீனிங் இல்ல)பேசிகிட்டு. தேர்தல் தேதி அறிவிச்சதுக்கு அப்புறம் பொதுக்குழு செயற்குழுவ கூட்டி எந்த கூட்டணினு ஒட்டு பெட்டி வச்சி வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டியது தான் (நம்ம ஜனநாயக ரீதியா போவோம் சார்) என்ன அவங்க நம்மள சேக்குறதுக்கு தான் எப்படி முடிவெடுப்பனுங்கனு தெரியல.

நம்ம முதல்வரை சந்திச்சு சமூக பொருளாதார கல்வி நிலையை அடிப்படையாக கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனுமுனு வழியுருத்துனாராம்.சமூக பொருளாதார நிலமையை பதிவு செய்தால் அரசின் இட ஒதுக்கீடு, இன்ன பிற சலுகைகள் வழங்க உதவியா இருக்கும்.இதுல சாதி என்ன வெங்காயத்துக்குனு தெரியல.எங்களுக்கு இவ்வளவு சாதி வோட்டு இருக்குனு காட்டி பேரம் பேசுரதுக்கு இல்லாம வேற என்னத்துக்கு?.
******************************************************************************
நமக்கெல்லாம் மட்டமான ரசனையாம். எப்படி நடிச்சாலும் பாப்போமாம் சொல்லிருக்காரு நம்ம ஆர்யா.என்ன பண்ணுறது விஜய் படமெல்லாம் ஓடும் போது இப்படி ஒரு நினைப்பு வரத்தான செய்யும்.ஆனா விஜய்க்கு சிலை வச்சி மலையாளத்தான் ரசனை என்னனு காட்டிடாங்க.
******************************************************************************
இப்பவே புத்தாண்டு குறுஞ்செய்திகள் வர ஆரம்பிச்சிடுச்சி. First wishes..Best wishes னு இன்னும் எத்தனை வரும்னு தெரியல.மெஸேஜ டெலிட் பண்ணுறதுக்கு இனி எக்ஸ்ட்ரா டைம் ஒதுக்கணும்..

அம்புட்டுதான்..தொடர்ந்து கொத்துவோம்...

Tuesday, November 30, 2010

ஒரிஜினல் எந்திரன் டாக்டர் விஜயகாந்த்

                                              
மேக்னடிக் மோட், ஃபைட் மோட் என பல மோட் களை ஆக்டிவேட் செய்து எதிரிகளை பறக்கவிட்டது எந்திரன் ரோபோ. ஆனால் எந்த மோடும் ஆக்டிவேட் செய்யாமல் எதிரிகளை தன் விரல் அசைவில் பறக்கவிட்டவர் எங்கள் கேப்டன்.அதற்கான ஆதாரம் இந்த கானொளி..
                                        
எந்திரனில் ரோபோவின் உடம்பு இரும்பால செஞ்சது ஆனா எங்க தலைவருக்கு உடம்பே ஸ்டீல் தான்.இன்னும் சொல்லனும்னா புல்லட் புரூஃப் பாடி. நம்பலைல..இந்த சீன பாருங்க..
                                          
இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது இன்னனா..
150 கோடி செலவழித்து எடுத்த எந்திரனில் சண்ட போட்டது ஒரு ரோபோ.அது வெறும் எந்திரம்.எங்கள் தலைவர் தான் ஒரிஜினல் எந்திரன்.

டிஸ்கி:
இந்த பதிவையும் படித்து வோட்டு போடுபவர்களுக்கு விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக தரப்படும்னு டிஸ்கி போடலாம்னு நினைச்சேன்.ஆனா பல பதிவர்கள் இந்த டிஸ்கி போட்டுவிட்டதால்.என்ன டிஸ்கி போடுறதுனு தெரியல.! (டிஸ்கி போட தெரியலங்கிறது ஒரு டிஸ்கியா)

Monday, November 29, 2010

என்னடா விளம்பரம்..

                                  
விளம்பரங்களின் காதலன் நான்.ஒவ்வொரு முறையும் புதுபுது விளம்பரங்களை பார்க்கும் போது அவை என்னுள் ஒரு இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்துகிறது.சில நிமிட கதைகள் விளம்பரங்கள்.சில நொடி கவிதைகள் விளம்பரங்கள்.நான் ஒரு விளம்பரபட இயக்குனரோ விளம்பர வழங்குனரோ இல்லை.விளம்பரங்களின் ரசிகன் நான்.விளம்பரங்களின் காதலன் நான்.

எப்போது இருந்து இந்த காதல் வந்தது என்று தெரியவில்லை. கையில் ரிமோட் இருந்தால் விளம்பரங்களின் ஊடே வேறு வேறு நிகழ்ச்சிக்கு தாவும் மனிதர்களின் இடையே.விளம்பரங்களின் ஊடே வேறு வேறு விளம்பரங்களை தேடும் வித்யாசமான நோய் இது.

சிறு வயதில் என்னிடம் ’என்ன ஆச்சு?’ என்று யாராவது கேட்டால் ’குழந்த அழுகுது --- உட்வர்ட்ஸ் குடுக்க சொல்லு ’ என்று சொல்லிதிரிவேன். ஹூடி பாபா ஹூடி பாபா என்று காற்றில் பறந்து வருவேன்.என் பேச்சின் ஊடே விளம்பர வார்த்தைகள் சரளமாக கலந்து வரும்.

’அம்மா எனக்கு துணி வேண்டாமா..துணி ஈரமா இருக்கு..துணி அன்கம்பர்டபிளா இருக்கு’ என்று வரும் நாப்கின் விளம்பரம் என் வாழ்க்கையில் மறக்கமுடியா விளம்பரம். என் அம்மா ’டேய் துணிய மாத்துடா’னு சொல்லும் போதெல்லாம் ‘அம்மா எனக்கு துணி வேணாமா’ என்று சொல்லி அடிவாங்கியிருக்கிறேன்.(என்னா அடி). நாப்கின் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் இந்த விளம்பரத்தில் வரும் வெறும் வார்த்தைகள் என்னை ஈர்த்திருக்கின்றன.

எங்கேனும் காபி குடிக்க நேர்ந்தால் நரசூஸ் காப்பியின் தாக்கத்தில் ‘பேஸ் பேஸ் நன்னாயிருக்கு என்பேன்.’மாமி இது பில்டர்காபி?’ என்று கேட்டு ’இது புரூடா’ என்று சொல்லுவார்கள் என்று எதிர் பார்ப்பேன்.ஆனால் யாரும் இதுவரை சொன்னதில்லை..

என்னடா விளம்பரம் என்கிறீர்களா.விளம்பரம் ஒரு சாதாரண வியாபார உத்தி அல்ல.அது ஒரு கலை.பொருளாதார வளர்ச்சியை விளம்பரங்களுக்கு முன் விளம்பரங்களுக்கு பின் என்று பிரிக்கலாம்.விளம்பரங்களின் தாக்கம் அத்தகையது.

விளம்பரங்களின் தேவைகளையும் விளைவுகளையும், நான் ரசித்த விளம்பரங்களின் ஊடே பேச விளைகிறேன் அவ்வளவே...

தொடர்ந்து பேசுவோம்....

Friday, November 26, 2010

சோறு கிடைக்குமா..

                                          
*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்

*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.

*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு

அளவற்ற அறிவியல் வளர்ச்சியும் உற்பத்தி பெருக்கமும் உலகமயமாக்கலும்
இருக்கும் நிலையில் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் எங்ஙனம் நிகழ்கின்றன.


நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.5 சதவீதம் என்று மார்தட்டும் ஒரு நாட்டில் 30 சதவீதம் பேர் பசியால் வாடுகின்றனர் என்பது எத்தகைய முரண்.


நகர்மயமாக்கலால் விளைநிலங்கள் மனைகளாகின்றன என்பது ஒரு குற்றச்சாட்டு. இருக்கட்டும்.ஆனால் நாட்டின் தரிசு நிலங்கள் அப்படியே இருக்கிறதே. அதை ஏன் பண்படுத்தி விளைநிலங்களாக மேம்படுத்தவில்லை.

தரிசு நில மேம்பாட்டு திட்டம் என்று ஒன்று இருக்கிறது ஆனால் இதன் மூலம் பண்படுத்தபட்ட ஒரு செண்ட் நிலத்தை கூட நான் இதுவரை பார்த்ததில்லை.எங்கள் ஊரில் பெருநிலங்கள் இன்றும் தரிசாகவே கிடக்கின்றன.எங்கள் ஆட்சியில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தினோம்.எங்கள் ஆட்சியில் 60 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தினோம் என்று மாறி மாறி அறிக்கை விடும் கழக தலைவர்கள் அதில் ஒரு ஏக்கரையாவது என் கண்களுக்கு காட்டினால் புண்ணியமாக இருக்கும்.

விளைநிலங்களை தன் பிள்ளைகளுக்கும் பேரபிள்ளைகளுக்கும் வாங்கி போட்டு தரிசாக்குகின்றனர் பல பணம் கொழுத்த அரசியல் வாதிகளும் பெருமுதலாளிகளும்.இதனால் உணவின்றி பாதிக்கபடுபோவது என்னவோ என்னை போன்ற நடுத்தரவர்கமும் அந்த 30 சதவீதமும் தான்.

எனக்கு வருத்தமளிக்கும் மற்றொரு விடயம் உணவு பொருள்களை வீணாக்குவது.வீடுகளிலும் உணவகங்களிலும் பெருவிழாக்களிலும் வீணாக கொட்டும் உணவுகள் டன் கணக்கில் வரும். வீட்டிலும் உணவகத்திலும் பாதி உணவை உண்டுவிட்டு பாதியை விட்டு செல்லும் நபர்களை கண்டால் எனக்கு கோபம் கோபமாக வரும்.விழாக்களில் அளவிற்க்கு அதிகமாக சமைத்துவிட்டு மீதியை வீணாக குப்பையில் கொட்டுவதை கண்டு வருந்தியிருக்கிறேன்.

Ferdinand Dimadura வால் இயக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு பெர்லின் திரைப்படவிழாவில் விருதுவென்ற
குறும்படம் Chicken a la carte.(இது ஒரு உண்மை சம்பவம்) வசதிபடைத்தவர் உணவின்மீது காட்டும் அலச்சியத்தையும். ஏழைகள் உணவின் மீது காட்டும் பக்தியையும், உள்ளங்கை நெல்லிகனி போல தெளிவாக காட்டியிருப்பார் இயக்குனர். தங்களுக்கு கிடைத்த எச்சில் உணவிற்காக ஜெபம் செய்துவிட்டு உண்ணும் அந்த பக்தி நெகிழச்செய்யும்.இவை என்னுள் பல வினாக்களை எழுப்புகின்றன அவற்றை பிரிதொரு நாளில் விரிவாக பேசலாம்.( நேரம் இருப்பவர்கள் தயவுசெய்து கானொளியை காணவும் உணவின் அருமை புரியும்)
                            

’தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழிப்போம்’ என்றான் பாரதி..நாம் என்ன செய்யபோகிறோம்..

குறைந்தபட்சம் உணவினை வீணாக்குவதையாவது தவிர்க்கலாமே..


தொடர்ந்து பேசுவோம்......